பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., வீட்டை நினைவு இல்லமாக
மாற்ற மக்கள் ஆட்சேபம்

சென்னை, சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை, அரசு நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து, அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், நேற்று காலை நடந்தது. அதில் பங்கேற்ற பெரும் பாலான குடியிருப் புவாசிகள், ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.ஜெ., மறைவுக்கு பின், அவர் வாழ்ந்த, போயஸ் கார்டனில் உள்ள, வேதா இல்லம் வீட்டை, அவரது நினைவு இல்லமாக மாற்ற, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

 ஜெ., வீட்டை, நினைவு, இல்லமாக ,மாற்ற ,மக்கள், ஆட்சேபம்

வெளியேற்றம்இதற்காக, அந்த வீட்டில் இருந்த பணியாளர்கள் உள்ளிட்ட எல்லாரும் வெளியேற்றப்பட்டனர். வீடு மற்றும் அதன் அறைகளை, வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு, அளந்து, மதிப்பீடும் தயார் செய்துள்ளனர்.ஜெ., இருக்கும் வரையில், இந்த வீட்டில், சசிகலாவும், அவரது உறவினர்கள் சிலரும் வசித்து வந்தனர்.


ஜெ., மறைவுக்கு பிறகும், இவர்கள் வசம் தான், இந்த வீடு இருந்தது. ஆனால், சசிகலா சிறைக்கு சென்றதும், அந்த வீட்டை கைப்பற்றும் முயற்சியில், தீபா உள்ளிட்ட, ஜெ., உறவினர்கள் முயன்றனர்.இதற்கிடையில், இந்த வீட்டை, அரசு கைப்பற்றி, நினைவு இல்லமாக மாற்றப் போவதாக அறிவித்தது. அதை எதிர்த்து, ஜெ., அண்ணன் மகள் தீபா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு விசாரணை, நிலுவையில் உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைளை, அரசு துவங்கி உள்ளது. வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதால் ஏற்படும் சமூக

தாக்கம் குறித்து, அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்க, சென்னையில், நேற்று கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இடையூறுசென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில், சென்னை சமூகப் பணி கல்லுாரி வாயிலாக, தேனாம்பேட்டை யில் உள்ள சமூக நலக்கூடத்தில், கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.இதில், போயஸ் கார்டனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து, 20க்கும் மேற்பட்டவர் கள் பங் கேற்றனர். அவர்களில் பெரும்பாலா னோர், வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். 'குடியிருப்பு பகுதியாக உள்ள போயஸ் கார்டனில், நினைவு இல்லம் அமைத்தால், அது குடியிருப்பு வாசி களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும்' என, கருத்து தெரிவித்தனர்.


வேறு சிலர், இந்த கூட்டம் குறித்து, முறையான தகவல் அளிக்கப்படவில்லை என்றும், குற்றம் சாட்டினர்.கூட்டத்தில், பாலசுப்பிரமணியம் என்பவர் பேசியதாவது:ஜெ., இருந்தபோது, போயஸ் கார்டனில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதில், மிகவும் கவனம் செலுத்தினார்; அந்த நிலை தொடர வேண்டும்.


பொது இடம்ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றினால், பல நடைபாதை கடைகள் முளைக்க வாய்ப்புள்ளது. அதிக அளவில் மக்கள் வர வாய்ப்புள்ளதால், குடியிருப்புவாசிகள் மிகவும்சிரமப்படுவர். இதனால், பொது இடத்தில், ஜெ., நினைவு இல்லம் அமைக்க, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். வித்யா என்பவர் கூறியதாவது:நான், போயஸ் கார்டனில், 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். போயஸ் கார்டனில் உள்ள சாலைகள் குறுகலாக உள்ளன.


நினைவு இல்லம் அமைத்தால், போக்குவரத்து

Advertisement

நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால், குடியிருப்புவாசிகளின் தனிமை பாதிக்கப்படும். அதுவும், தற்போது, பல குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. எங்கள் பகுதிக்குள் யார் வந்து செல்கின்றனர் என்பதை அறிய முடியாது. இதனால், எங்கள் பாதுகாப்பு பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமற்றதுஇக்கூட்டத்தில் பங்கேற்ற, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், டி.சிவராஜ் பேசிய தாவது:ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். அவர் வாழ்ந்து, மறைந்த வீட்டை தான், நினைவு இல்லமாக மாற்ற முடியும். வேறு இடத்தில் நினைவு இல்லம் கட்டுவது பொருத்தமற்றது. இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை சமூக பணி கல்லுாரி உதவி பேராசிரியர் கூறியதாவது:ஜெ., வீட்டை, நினைவு இல்லமாக மாற்றுவதில் ஏற்படும் சமூக தாக்கம் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டம் வரும் நிலையில், அப்பகுதி மக்களுக்கு, என்னென்ன இடையூறுகள் ஏற்படும் என்பது குறித்தும், கேட்கப்பட்டது.


இதில், 108 குடியிருப்புவாசிகள், தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அவர்களின் கருத்துகள், ஒரு வாரத்தில் அறிக்கையாக, மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
09-டிச-201821:57:21 IST Report Abuse

oceதினகரன் ஆட்சி செய்வாரா. ஏனய்யா அதை சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டாமா.

Rate this:
karthi - chennai,இந்தியா
09-டிச-201819:02:41 IST Report Abuse

karthiவேலைக்காரி க்கு Poe's Garden வீடு கேட்குதா? இந்த பழனிச்சாமி சேகர் எங்க இருந்து வந்தாண்டா? அவனுக்கு மனசாட்சியே கிடையாதா? யார் வீட்டில் யாருடா இருப்பது?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-டிச-201818:53:31 IST Report Abuse

Pugazh Vமெரினா பீச் 13 கிமீ. இருக்கும் போது, நாலே நாலு சமாதிகள் சுமார் 1.2 கிமீ. இல் இருக்கிற பகுதிக்கா அரவங்காட்டுலருந்து புள்ளைய சிவா கூட்டிண்டு வந்தார்? அடப்பாவமே. யாராவது ஆட்டோக்காரரை கேட்டால் கூட பீச்சுக்கு கூட்டிண்டு போயிருப்பாரே

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X