குற்றப்பத்திரிகை தாமதம் ராமதாஸ் சந்தேகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குற்றப்பத்திரிகை தாமதம் ராமதாஸ் சந்தேகம்

Added : டிச 09, 2018

சென்னை, 'பாரதியார் பல்கலை பணி நியமன ஊழல் வழக்கில், உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புப் பிரிவு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:கோவை பாரதியார் பல்கலையில், பேராசிரியர் பணிக்கு, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, துணை வேந்தர் கணபதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில், 10 மாதங்களாகியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய இந்த வழக்கில், நீதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. இதில், ஆதாரங்கள் இருந்தும், குற்றப்பத்திரிகை தாமதமாவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.கிரிமினல் வழக்குகளை போலவே, லஞ்ச வழக்குகளிலும், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதை அறிந்தும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் தாமதம் செய்வது, இயல்பாக நடப்பதாக தெரியவில்லை.கைது செய்யப்பட்ட கணபதி, யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்ற விபரத்தை வெளியிடப் போவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது

.அதைத் தொடர்ந்து, அவர் விடுதலை செய்யப்படுவது உறுதி என, உயர் கல்வித் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்படக் கூடாது. எனவே, இவ்வழக்கில், உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X