பிரிவினை அரசியல் செய்தவர் வைகோ!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பிரிவினை அரசியல் செய்தவர் வைகோ!'

Added : டிச 09, 2018 | கருத்துகள் (4)

சென்னை, :பிரிவினையை பேசியே, அரசியல் செய்தவர், வைகோ,'' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பதாக கூற முடியாது. பா.ஜ.,வை பொருத்தவரையில், வலுவான கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம். தேச ஒற்றுமையில், பிரதமருக்கும், பா.ஜ.,விற்கும் மிகுந்த அக்கறை உள்ளது. வைகோ, பிரிவினையை பேசியே, அரசியல் செய்தவர்.மேகதாது ஆய்வுக்கு தான், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது; அணை கட்ட ஒப்புதல் வழங்கவில்லை. எந்த மாநிலத்தையும் வஞ்சிக்காமல், நதிநீர் பங்கீட்டை செயல்படுத்த, மத்திய அரசு விரும்புகிறது. மேகதாது விவகாரத்தில், தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு, பா.ஜ., துணை நிற்கும்.இவ்வாறு, தமிழிசை கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X