மாதவரம் பஸ் ஸ்டாண்டில் மாணவி தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாதவரம் பஸ் ஸ்டாண்டில் மாணவி தற்கொலை முயற்சி

Added : டிச 09, 2018

மாதவரம், ;மாதவரம் புறநகர் பேருந்து நிலைய கழிப்பறையில், கல்லுாரி மாணவி கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.ஆந்திர மாநிலம், நெல்லுார், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், கீதா மாதுரி, 20; சென்னை, பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வருகிறார்.சமீபத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்ட கீதா மாதுரியை, அவரது பெற்றோர், பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.சிகிச்சை பெற்றதில், உடல்நலம் சரியானதால், மருத்துவமனையில் இருந்து, கீதா மாதுரியை, 'டிஸ்சார்ஜ்' செய்த அவரது பெற்றோர், சொந்த ஊரான ஆந்திராவிற்கு அழைத்துச் செல்வதற்காக, நேற்று முன்தினம் மாலை, மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.அங்கு பேருந்திற்காக, பெற்றோருடன் காத்திருந்த கீதா மாதுரி, பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.கழிப்பறைக்கு சென்ற கீதா மாதுரி, அரை மணி நேரத்திற்கு மேலாகியும் திரும்பி வராததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர், கழிப்பறைக்குள் சென்று பார்த்தனர்.அங்கு, பிளேடால் கையை அறுத்துக் கொண்ட கீதா மாதுரி, ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்ட பெற்றோர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, கீதா மாதுரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து, மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X