டில்லியில் நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை| Dinamalar

டில்லியில் நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை

Added : டிச 09, 2018



தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று டில்லி செல்கிறார். சோனியாவை சந்தித்து, கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வரும்படி அழைக்கிறார். நாளை, எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.பெரும்பாலான மாநிலங்களில், மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள, பா.ஜ.,வே ஆட்சியில்உள்ளது.லோக்சபா தேர்தலில், பா.ஜ.,விற்கு எதிராக, வலுவான கூட்டணியை அமைத்தால் மட்டுமே, அதை வீழ்த்த முடியும் என்பதால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான, சந்திரபாபுஈடுபட்டுள்ளார்.மெகா கூட்டணிஇது தொடர்பாக அவர், காங்., தலைவர் ராகுல், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்து பேசினார்.மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் ஆகியோரை, நேரில்சந்தித்து பேசினார்.அவர்களும், பா.ஜ., விற்கு எதிரான அணியில் இணைய முன்வந்துஉள்ளனர்.மேலும், பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட, மேலும் பல கட்சிகளையும் இணைத்து, தேசிய அளவில் மெகா கூட்டணி அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில், நாளை நடக்க உள்ளது.மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதியின், முழு உருவ சிலை, சென்னையில், தி.மு.க., தலைமை அலுவலகமான, அறிவாலயத்தில், வரும், 16ல், திறக்கப்பட உள்ளது. இதில், காங்., முன்னாள் தலைவர் சோனியா பங்கேற்க உள்ளார்.அவருக்கு அழைப்பிதழ் வழங்குவதற்காக, ஸ்டாலின், இன்று காலை, 6:10 மணிக்கு, விமானத்தில் டில்லி செல்கிறார்.அங்கு சோனியாவை சந்தித்து, விழா அழைப்பிதழை கொடுக்கிறார். அதன் பின், பிற கட்சி தலைவர்களை சந்தித்து, அழைப்பிதழ் கொடுக்க உள்ளார்.நாளை, எதிர்க்கட்சிகள் நடத்தும்ஆலோசனை கூட்டத்தில்பங்கேற்கிறார்.ஒருமித்த கருத்துகாங்., தலைவர் ராகுல் தலைமையில்,இக்கூட்டம் நடக்க உள்ளது. கருணாநிதி மறைவுக்கு பின், முதல் முறையாக, எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இக்கூட்டத்தில், ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், பா.ஜ.,விற்கு எதிராக, வலுவான கூட்டணி அமையும்.அதைத் தொடர்ந்து, சென்னையில் நடக்கும், கருணாநிதி சிலைதிறப்பு விழாவில், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்று, கூட்டணியை வலுப்படுத்துவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. - நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X