சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊர்க்காவல் படையினர் தர்ணா

Added : டிச 09, 2018
Advertisement
 ஊர்க்காவல் படையினர் தர்ணா

சென்னை, பணி நிரந்தரம் கோரி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், ஊர்க் காவல் படையினர், நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல் துறையினருடன் இணைந்து, ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை சீருடை, தினமும், 500 ரூபாய் படி என்ற அளவில், பணி வழங்கப்படுகிறது.தமிழக ஊர்க்காவல் படையைச் சேர்ந்த, 2,500 பேர், தேர்தல் பணி பாதுகாப்புக்காக, தெலுங்கானா சென்றிருந்தனர். பணி முடிந்து, சென்னை திரும்பிய அவர்கள், நேற்று மாலை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திரண்டு, திடீரென சாலையில் அமர்ந்து, போராட்டம் நடத்தினர்.போராட்டம், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. உயரதிகாரிகள்பேச்சு நடத்தியதை தொடர்ந்து, ஊர் காவல் படையினர் கலைந்து சென்றனர்.இது குறித்து, ஊர்க் காவல் படையினர் கூறியதாவது:போலீசாருக்கு இணையாக உயிரை பணயம் வைத்து, பணியில் ஈடுபடுகிறோம். எங்களுக்கு தினப்படி, 500 ரூபாய் தான். மாதத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலை தருகின்றனர். ஆந்திராவில் உள்ள ஊர் காவல் படையினருக்கு, 21 ஆயிரம் ரூபாய் சம்பளம் உட்பட, அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

எங்களுக்கு, 16 ஆயிரம்ரூபாய் சம்பளத்துடன், மாதம் முழுவதும் பணி கேட்கிறோம். ஆனால், அதிகாரிகள் பரிசீலிக்க மறுக்கின்றனர். தெலுங்கானாவில், எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. ஐந்து நாட்களும், கொசுக் கடியில் தான் கஷ்டப்பட்டேம். இது போன்ற பணிகளுக்கு மட்டும், எங்களை பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X