300 ஏக்கர் பயிர்கள் சேதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

300 ஏக்கர் பயிர்கள் சேதம்

Added : டிச 09, 2018

போடி:போடியில் 'கஜா' புயலால் 300 ஏக்கருக்கு மேல் சோளம், மக்காச்சோளப் பயிர்கள் சேதமாகி இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.போடி ஒன்றியத்தில் சிலமலை ,அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, ராசிங்காபுரம், உப்புக்கோட்டை, கோடங்கிபட்டி, டொம்புச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகள் அடங்கியுள்ளன. இங்கு சோளம், மக்காச்சோளம் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. 'கஜா' புயலால் இப்பகுதியில் பயிர் சேதம் அதிகம் ஏற்பட்டுள்ளது. அதனை கணக்கிடும் பணியில் வேளாண்துறை, வருவாய் துறையினர் ஈடுபட்டனர். டொம்புச்சேரி பகுதியில் 100 ஏக்கரும், கோடாங்கிபட்டி பகுதியில் 85 ஏக்கரும், அம்மாபட்டி, சிலமலை, பெருமாள்கவுண்டன்பட்டி, உப்புக்கோட்டை, ராசிங்காபுரம் பகுதியில் 115 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தது தெரியவந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X