'ஷாக்' வைத்தியம் டாக்டருக்கு, 'சம்மன்'| Dinamalar

'ஷாக்' வைத்தியம் டாக்டருக்கு, 'சம்மன்'

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி, ஓரின சேர்க்கையாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, அவர்களுக்கு மின்சார, 'ஷாக்' வைத்து கொடுமைப்படுத்திய டாக்டருக்கு, டில்லி நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பியுள்ளது.டில்லியை சேர்ந்தவர் டாக்டர், பி.கே.குப்தா. இவர், கரோல் பாக் பகுதி யில், மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு, ஓரின சேர்க்கையாளர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை, குணப்படுத்துவதாக கூறி வந்தார்.ஓரின சேர்க்கை என்பது, மனதளவில் ஏற்படும் பாதிப்பு எனக் கூறி, உளவியல் ரீதியான சிகிச்சை அளித்து வந்தார்.பின், நோயாளிகளுக்கு, 'ஹார்மோன்' சிகிச்சை அளிப்பது, மின்சார ஷாக் கொடுப்பது போன்ற, சிகிச்சைகளை செய்தார். இதுபற்றி கேள்விப்பட்ட டில்லி மருத்துவ கவுன்சில், டாக்டர் குப்தாவை, 2016ல், கவுன்சிலில் இருந்து நீக்கியது.அதன் பின்னரும், தனது சிகிச்சையை, குப்தா தொடர்ந்தார். இதையடுத்து, அவர் மீது, டில்லி நீதிமன்றத்தில், வழக்கு தொடுக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அபிலாஷ் மல்ஹோத்ரா, 'டாக்டர் குப்தா வழங்கி வரும் சிகிச்சை முறைகள், மருத்துவ முறைப்படியும், சட்டப் படியும், ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. எனவே, அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என, சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X