பொது செய்தி

தமிழ்நாடு

போதைப்பாக்கு விற்பனை

Added : டிச 09, 2018
Share
Advertisement
கூடலுார்:தமிழக எல்லைப்பகுதியான குமுளி, கூடலுாரில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பாக்கு விற்பனை அமோகமாக நடந்து வரு கிறது.கேரளாவில் போதைப்பாக்கு மற்றும் புகையிலை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதை ஒட்டி குமுளியில் உள்ள தமிழகப்பகுதியில் அவற்றின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கேரள மக்கள், தமிழகப்பகுதிக்கு வந்து இதை அதிகமாக
 போதைப்பாக்கு விற்பனை

கூடலுார்:தமிழக எல்லைப்பகுதியான குமுளி, கூடலுாரில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பாக்கு விற்பனை அமோகமாக நடந்து வரு கிறது.கேரளாவில் போதைப்பாக்கு மற்றும் புகையிலை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதை ஒட்டி குமுளியில் உள்ள தமிழகப்பகுதியில் அவற்றின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கேரள மக்கள், தமிழகப்பகுதிக்கு வந்து இதை அதிகமாக வாங்கி செல்கின்றனர்.கெடுபிடிகள் அதிகம் என்ற காரணத்தை முன்வைத்து, ரூ. 5 விலையுள்ள புகையிலை ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கூடலுாரில் பள்ளி மற்றும் கோயிலுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப் பாக்கு விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. இதில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்டு கொள்வதே இல்லை. மாதத்திற்கு ஒரு முறை பெயரளவிற்கு சோதனை என்ற பெயரில் வந்து விட்டு செல்வதால் தடை செய்யப்பட்ட இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X