பொது செய்தி

தமிழ்நாடு

'ஈஷா கிராமோத்சவம்' திருவிழா : ஈரோட்டில் இன்று இறுதிப் போட்டி

Added : டிச 09, 2018
Advertisement


கோவை, 'ஈஷா கிராமோத்சவம்' திருவிழா இறுதிப் போட்டி, ஈரோட்டில் இன்று நடக்கிறது.கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே, விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்க விழா நடத்தப்படுகிறது.விளையாட்டு விழாஈஷா கிராம புத்துணர்வு இயக்கம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில், தமிழகத்தில், 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டு திருவிழா, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.நடப்பாண்டு, 14-வது கிராமோத்சவ திருவிழா, அக்., 20ல் துவங்கியது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கிளஸ்டர், மாவட்டம், மண்டலம் என, பல கட்டங்களில், வாலிபால், த்ரோபால், கபடி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.இறுதிப் போட்டிகள்,ஈரோடு மாவட்டத்தில் உள்ளடெக்ஸ்வேலியில், இன்று நடக்கின்றன. ஆண்களுக்கான வாலிபால் போட்டியில், முதலிடம் பிடிக்கும் அணிக்கு, 5 லட்சம், பெண்களுக்கான த்ரோபால் போட்டியில், முதலிடம் பிடிக்கும் அணிக்கு, 1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.ரூ. 2 லட்சம் பரிசு கபடி போட்டியில் முதல் இடம் பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முறையே, 2 லட்சம், 1 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது.பரிசளிப்பு விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கருப்பணன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற, பளு துாக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு உட்பட பலர் பங்கேற்கின்றனர்.ஆண்களுக்கான கபடி போட்டியில், முதலிடம்பிடிக்கும் அணி, தமிழ் தலைவாஸ் அணியுடன் நட்பு ரீதியாக மோதவுள்ளது.மேலும், பாரம்பரிய கிராமிய விளையாட்டு மற்றும் பொழுது போக்கு விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா நடத்தப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X