'உலகமறிந்த உண்மைக்கு பாக்., பிரதமர் ஒப்புதல்' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'உலகமறிந்த உண்மைக்கு பாக்., பிரதமர் ஒப்புதல்'

புதுடில்லி, 'மும்பையில், 2008ல் நடந்த தொடர் தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப் புகள் நடத்தின' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியது குறித்து, கருத்து தெரிவித்துள்ள, நம் ராணுவ தலைமை தளபதி, ராவத், ''அனைவருக்கும் தெரிந்த உண்மையை, பாகிஸ்தான் பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார்,'' என, குறிப்பிட்டார்.

 'உலகமறிந்,த உண்மைக்கு, பாக்., பிரதமர், ஒப்புதல்'

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், மிகப் பெரிய

தாக்குதலை நடத்தினர். 'இந்த தாக்குதலில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர் - இ - தொய்பா தலைவன், ஹபீஸ் சயீத், முக்கிய குற்ற வாளி' என, அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதை, பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமரான, முன்னாள் கிரிக்கெட் வீரர், இம்ரான் கான், பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:மும்பை தாக்குதலை, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பே நடத்தியுள்ளது.இது தொடர்பான அனைத்து தகவல்களையும் கோரியுள்ளேன். நமது நலனுக்காக, நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை விரைந்து நடத்திட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு, நம் ராணுவத்தின் தலைமை தளபதி

Advertisement

யான, ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான். ஆனால், மும்பை தாக்குதலை யார் நடத்தினர் என்பது, உலகத்தில் உள்ள அனைவருக்கும், ஏற்கனவே தெரியும். அதை, தற்போது அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
09-டிச-201822:34:51 IST Report Abuse

anbuபாகிஸ்தான் ஒப்புக்கொண்டாலும். பாச புகழும் பீடை பூச்சியும் ஒப்புக்கொள்ளமாட்டாது.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
09-டிச-201819:48:44 IST Report Abuse

r.sundaramமணி சங்கர் ஐயர் தற்ப்போது என்ன சொல்கிறார்?

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-டிச-201815:26:29 IST Report Abuse

தமிழ்வேல் இம்ரான் கான் கூறுவதுபோல குற்றவாளி நம்மால் தண்டிக்கப் பட்டால் நல்லது.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X