சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளை கொலை செய்தது ஏன்? கைதான தந்தை போலீசில் வாக்குமூலம்

Added : டிச 09, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 குழந்தைகளை கொலை செய்தது ஏன்? கைதான தந்தை போலீசில் வாக்குமூலம்


கோவை, கோவையில், இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை, போலீசார் கைது செய்தனர். மாமியார் - மருமகள் தகராறே, குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்ற தாக, போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான்.கோவை, பீளமேடு, மசக்காளிப்பாளையத்தைச் சேர்ந்தவன் பத்மநாபன், 47; தனியார் நிறுவன மேலாளர். இவனது மனைவி செல்வராணி. 15 - 3 வயதில், இரண்டு மகள்கள், தனியார் பள்ளியில், 10 மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர்.நேற்று முன்தினம், இரண்டு மகள்களின் கழுத்தையும் நெரித்து கொலை செய்த பத்மநாபன், தப்பியோடினான். அவனை, சிங்காநல்லுார் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.பத்மநாபன் கூறியதாவது:சம்பளத்தை, என் மனைவியிடம் கொடுத்து விடுவேன். வீட்டில் எப்போதும், என் தாய் மற்றும் மனைவி இடையே தகராறு இருந்து வரும். தினமும், சண்டை போட்டு வந்தனர். இதனால், வாழ்வில் விரக்தி ஏற்பட்டது.மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. எனக்கும் கடன் பிரச்னை ஏற்பட்டு, அவதியடைந்து வந்தேன். ஒட்டுமொத்தமாக பிரச்னையில் இருந்து விடுபட, அனைவரையும் கொலை செய்து, தற்கொலை செய்ய எண்ணினேன். இரண்டு நாட்களுக்கு முன் இரவு, வீட்டில் தாய் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது.கோபத்தில், இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தேன். மனைவியின் உறவினர்கள் வந்து, அவரை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். என் தாய் பக்கத்து வீட்டுக்கு சென்று தங்கிவிட்டார். இரண்டு மகள்கள் மட்டும், என்னுடனே இருந்தனர்.இவர்கள் இருவரிடமும் மகள்களை விட்டு செல்லக் கூடாது என கருதி, அவர்கள் துாங்கியபோது, கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொன்று, நானும் துாக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றேன். அப்போது, என் தாய் வீட்டுக்குள் வந்ததால், தப்பியோடினேன்.இவ்வாறு, அவன் வாக்கு மூலம் அளித்துள்ளான்.போலீசார் கூறியதாவது:கைதான பத்மநாபன், சற்று மனச்சிதைவுடன் இருக்கிறார். அவருக்கு பெரிய அளவில் கடன் தொல்லை எதுவும் இல்லை. வீட்டில் ஏற்பட்டு வந்த தொடர் பிரச்னை காரணமாக, இரண்டு குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'சைக்கோ' கொலையாளி தற்கொலைஉத்தமபாளையம் அருகே, கோகிலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கம்பம் அருகே, புதுப்பட்டி ஜமுனாவை, 39, திருமணம் முடித்து, அங்கேயே தங்கி கடை நடத்தினார். கடந்த, 2016 டிச., 5ல் மனைவி, இரு பெண் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு, தனது கழுத்தையும் அறுத்து கொண்டார். தொடர் சிகிச்சையில் உயிர் பிழைத்தார்.போலீஸ் விசாரணையில், எவ்வித காரணமின்றி மூவரை கொன்றதுடன், மனைவியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை பாத்திரத்தில் சேகரித்ததால், 'சைக்கோ' கொலையாளி என, முத்திரை குத்தப்பட்டார். அவ்வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த முருகனுக்கு, உறவினர்கள் யாரும் அடைக்கலம் தராததால், சின்னமனுார் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சின்னமனுார் போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-டிச-201816:47:48 IST Report Abuse
Malick Raja சந்திர சேகர ராவுக்கு ஜோஷ்யம் சொன்னவர் இவரைப்போன்றவர்களுக்கெல்லாம் சொல்வதில் காரணம் பணம் யாரிடம் இருக்கிறதோ அங்கே தான் ஜோஷ்யம் செல்லும்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-டிச-201806:21:18 IST Report Abuse
D.Ambujavalli குழந்தைகளின் padaththaip paarkkakyil oru thaayaaka, paattiyaaka, manathai allip pidungukirathu. Seeraatti valarththa selvankalaik kolla eppadiththaan manam vanthatho?
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
11-டிச-201814:28:08 IST Report Abuse
Subramanian Arunachalam பல குடும்பங்களில் இந்த நிலை தான் . வெகு சிலர் தங்கள் நிதானத்தை இழந்து கொலை செய்யும் அளவிற்க்கு சென்று விடுகின்றனர் . இந்த நிகழ்வில் குற்றம் அனைத்தும் மாமியார் அல்லது மருமகள் மீது தான் சொல்லவேண்டும் . ஆனால் தண்டனை என்னவோ கணவனுக்கு மட்டும் தான் கிடைக்கும் . யாரவது பெண்ணிய வாதி (அப்படி என்றால் என்ன ) இதை பற்றி விளக்க வேண்டும் . அந்த குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X