மதுரை போலீசாரை தாக்க முயற்சி பு.த., நிர்வாகி உள்பட மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை போலீசாரை தாக்க முயற்சி பு.த., நிர்வாகி உள்பட மூவர் கைது

Added : டிச 09, 2018


வடமதுரை வடமதுரை அருகே வழக்கில் தொடர்புடைய ஐயப்பன், 38, ஐ தேடி வந்த மதுரை தல்லாகுளம் போலீசாரை தாக்க முயன்ற வழக்கில் புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், 43, உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன். மதுரை பகுதியில் நடந்த ஒரு குற்ற சம்பவம் தொடர்பாக இவரை அழைத்துச்செல்ல தல்லாகுளம் எஸ்.ஐ., மணிக்குமார், போலீசார் செந்தில்குமார், செல்வராஜ் நேற்று முன்தினம் மாலை தென்னம்பட்டி வந்தனர்.ஐயப்பனை கண்டு பிடித்து அழைத்து செல்ல முயன்றபோது, அதேபகுதியை சேர்ந்த முனியப்பன்,45, பழனிச்சாமி,44, ராஜேந்திரன் மற்றும் 12 பேர் தடுத்தனர். போலீசாரை தாக்க முயன்றுள்ளனர். ஐயப்பன் தப்பியோடி விட்டார்.இதுதொடர்பாக மணிக்குமார் எஸ்.ஐ., புகாரின்பேரில், முனியப்பன், பழனிச்சாமி, ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ராஜேந்திரன், புதிய தமிழகம் கட்சியின் வடமதுரை ஒன்றிய செயலாளர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X