பொது செய்தி

தமிழ்நாடு

கொடி நாள் நிகழ்ச்சி ரூ. 5 லட்சம் உதவி

Added : டிச 09, 2018
Advertisement
 கொடி நாள் நிகழ்ச்சி ரூ. 5 லட்சம் உதவி

ஊட்டி:ஊட்டியில் நடந்த கொடிநாள் நிகழ்ச்சியில், 25 பயனாளிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ஆண்டு தோறும் டிச., 7ம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் முப்படை வீரர்கள், பணியின் போது உடல் உறுப்பு இழந்தவர்களுக்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில், 2,700 முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்துள்ளனர். நடப்பாண்டில், 68 லட்சம் ரூபாய் கொடி நாள் நிதி திரட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், ஊட்டியில் நடந்த கொடி நாள் நிகழ்ச்சியில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பல்வேறு திட்ட நிதியின் கீழ், 25 பயனாளிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கர்னல் தாஸ் குப்தா, முன்னாள் படை வீரர்கள் நல இயக்குனர் சரவணன், ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X