பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மையம் அமைக்க முடிவு

Added : டிச 09, 2018
Advertisement

உடுமலை:உடுமலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது.பள்ளி செல்லும் வயதில், செல்ல முடியாமல் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பராமரிக்க, பகல் நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 13 வட்டாரங்களிலும் மையங்கள் செயல்படுகின்றன.இதில், 6 முதல் 14 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். உடுமலையில் போடிபட்டி, குடிமங்கலத்தில் சோமவாரப்பட்டி ஊராட்சியிலும் செயல்படுகிறது. இருப்பினும், இங்கு, 6 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடையவர்கள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றனர்.அதற்கும் குறைவான வயதுடைய, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கென சிறப்பு மையம் இல்லை. இதனால், பள்ளி செல்லும் வயதிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மையம் போல, குழந்தைகளுக்கான மையம் அமைக்க வேண்டுமென, தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்தில், 1 முதல் 5 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மையம் உள்ளது. அனைத்து வட்டாரங்களிலும், இம்மையம் அமைக்கப்பட வேண் டுமென எதிர்பார்ப்பு இருந்தது.அடுத்தகட்டமாக, உடுமலையில், 1 முதல் 5 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 'தொடக்க நிலை பயிற்சி மையம்', அமைப்பதற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தினர் கூறுகையில், 'உடுமலை வட்டாரத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான தொடக்க நிலை பயிற்சி மையம் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மையத்தில் குழந்தைகளுக்கு தேவையான பயிற்சி பொருட்கள் வழங்க பட்டியல் கேட்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X