தேனியில் டாக்டர் வீட்டில் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் டாக்டர் வீட்டில் திருட்டு

Added : டிச 09, 2018

தேனி:தேனி கே.ஆர்.ஆர்.நகரை சேர்ந்த டாக்டர் அமல்ராஜ், 45. இவர் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நவ.3.ேல் மதுரையில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீடு திரும்பி பார்த்த போது, மர்மநபர்கள் வீட்டின் கதவைத்திறந்து லேப்டாப், அலைபேசி, இரண்டு மின்மோட்டார்கள், இருப்பு கேட் போன்றவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X