தேர்தல் கணிப்பாளர்!| Dinamalar

தேர்தல் கணிப்பாளர்!

Added : டிச 09, 2018
 தேர்தல் கணிப்பாளர்!

தேர்தல் கணிப்பாளர்!
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறும். நான், மிகப்பெரிய தேர்தல் கணிப்பாளர். என் தலைமையில், மத்திய பிரதேசத்தில், மீண்டும், பா.ஜ., ஆட்சி மலரும். கடந்த தேர்தலை விட, இந்த தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்றுவோம்.சிவ்ராஜ் சிங் சவுகான்மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,



பிரிவினைவாத அரசியல்!

உத்தர பிரதேச மாநிலம், புலந்த்ஷஹர் கலவரம், ஆளும், பா.ஜ.,வின் பிரிவினைவாத அரசியலை வெளிப்படுத்துகிறது. இந்த கட்சியிடம், நாட்டு மக்கள் உஷாராக இருக்க வேண்டும். மக்களை பிளவுபடுத்தி, தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., முயற்சிக்கிறது.அகிலேஷ் யாதவ்உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி


மன்னிச்சிக்கோங்க!
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் அறிக்கையை பார்த்தேன். எனக்கு, அவருடன் நீண்ட காலமாக குடும்ப உறவு உள்ளது. நான் கூறியது அவரை காயப்படுத்தி இருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து, அவருக்கு கடிதம் எழுத உள்ளேன்.சரத் யாதவ்நிறுவனர், லோக்தந்திரிக் ஜனதா தளம்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X