ஆட்டோக்களால் பயணிகள் அவதி ஆர்.டி.ஓ., நடவடிக்கை எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்களால் பயணிகள் அவதி ஆர்.டி.ஓ., நடவடிக்கை எதிர்பார்ப்பு

Added : டிச 09, 2018

கிணத்துக்கடவு,:கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை முறைப்படுத்தவும், பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு தீர்வு காணவும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்த சிறுவியாபாரிகள் மற்றும் பயணிகள் சார்பில், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துக்கழக அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக, வடசித்துார், கோதவாடி, கொண்டம்பட்டி, சுல்தான்பேட்டை, மெட்டுவாவி, மன்றாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ்கள் செல்கின்றன.தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தைக்கு சென்று திரும்பும் மக்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் நிற்கின்றனர்.ரோட்டோரம் நிற்கும் பயணிகளுக்கு இடையூறாக, 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. கோவை, பொள்ளாச்சி ரோட்டில் இருந்து பஸ் திரும்பும்போது, ஆட்டோக்களை கடந்து சென்று, பஸ் பிடிப்பதில் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.கிணத்துக்கடவு போலீசார் பலமுறை எச்சரித்தும், பயணிகளுக்கு இடையூறாகவே ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. ஆட்டோக்களின் நெருக்கடியால், பஸ்கள் தள்ளி நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணிகள் ஓடிச்சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது.இதை தவிர்க்க, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஆட்டோக்களின் அத்துமீறலை தடுக்க வேண்டும். ஆட்டோ ஸ்டாண்டை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X