பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் மரங்கள்

Added : டிச 09, 2018
Advertisement

கொடைக்கானல்:கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் மரங்களை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வாகனங்களில் வருகின்றனர். அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி என கனரக வாகனங்களின் போக்குவரதது இரவு முழுவதும் உள்ளது. கடந்த நவ.,16 ம் தேதி வீசியகஜா புயலால் கொடைக்கானலில்யூகலிப்டஸ், வேட்டில், பைன் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.கொடைக்கானலில் மேற்கூறிய அந்நிய மரங்களின் ஆதிக்கம் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பரவியுள்ளது. புயலுக்கு லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. ஏற்கனவே இம்மரங்களின்கீழ் புல் உட்பட தாவரங்கள் வளராது. இதனால் வன உயிரினங்களின் தேவைக்கான உணவு கிடைக்காமல் நகர்பகுதி மற்றும் விவசாய நிலங்களை நோக்கியே வனவிலங்குகள் தஞ்சமடைகின்றன.கொடைக்கானல் நகரில் உள்ள அந்நிய மரங்களால் எவ்வித பயனும் இல்லை.மாறாக கொடைக்கானல் நகர், மேல்மலை, பழநி கொடைக்கானல்-ரோடு, வத்தலக்குண்டு-கொடைக்கானல் ரோடுகளில் இம்மரங்களினால் விபத்து அபாயமே அதிகம் உள்ளது. பெரும்பாலும் ராட்சத யூகலிப்டஸ் மரங்களால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடனே வசிக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டு புதுக்காடு, அரசு போக்குவரத்து கிளை அலுவலகம், மருத்துவமனை,கம்பம் நடராஜன் நகர்,பெருமாள்மலைதான். எதிர்கட்சிகளும் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து ரோட்டோரமுள்ள மரங்களை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் சீனிவாசனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X