பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதிமன்றத்தில் 1,374 வழக்குகள் விசாரணை: ரூ. 1.59 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Added : டிச 09, 2018
Advertisement
 மக்கள் நீதிமன்றத்தில் 1,374 வழக்குகள் விசாரணை: ரூ. 1.59 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோர்ட் வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்ற விசாரணையில், 1,374 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 1.59 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சார்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று, சமரசத்துக்கு உட்பட்ட கோர்ட் நிலுவை வழக்குகளை விசாரிக்கும் மக்கள் நீதிமன்றம் கூடியது.சார்பு நீதிமன்ற நீதிபதி ரவி தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகனாம்பாள், மாஜிஸ்திரேட்டுகள் ரேவதி, ஆறுமுகம் மற்றும் அமர்வு உறுப்பினர்கள் முன்னிலையில், வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.விசாரணையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கேட்பு வழக்குகள், 175 விசாரிக்கப்பட்டு, 12க்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக, 38.65 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவானது.சிவில் வழக்குகள், 185ல் 31க்கு தீர்வு காணப்பட்டு, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு இழப்பீடாக, 81 லட்சத்து, 66 ஆயிரத்து, 631 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.செக்மோசடி தொடர்பாக, 193 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ஒன்பதுக்கு தீர்வு காணப்பட்டு, 17.85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவானது.சமரசத்துக்கு உட்பட்ட குற்றவியல் வழக்குகள், 458 விசாரிக்கப்பட்டு, 445க்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் அபராதமாக, மூன்று லட்சத்து, 29 ஆயிரத்து, 500 ரூபாய் செலுத்த உத்தரவிடப்பட்டது.கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத, வங்கி வழக்குகள், 162 விசாரிக்கப்பட்டு, 24 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு, 18 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவானது.வாரிசுரிமை கேட்பு வழக்குகள், 192 விசாரிக்கப்பட்டு, 26க்கு வாரிசு உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடும்ப வழக்குகள், 10 விசாரணைக்கு எடுக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, தீர்வு காணப்படாமல் மீண்டும் கோர்ட்டுக்கு அனுப்பப்பட்டது.நேற்றைய மக்கள் நீதிமன்ற விசாரணைக்கு, 1,374 வழக்குகள் எடுக்கப்பட்டு, 547 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு கோடியே, 59 லட்சத்து, 46 ஆயிரத்து, 131 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X