ரூ.19 லட்சம்  மோசடி: மேலாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.19 லட்சம்  மோசடி: மேலாளர் கைது

Added : டிச 09, 2018

கோவை:கோவை அருகே, காரமடை சாய்நகரை சேர்ந்தவர் கார்த்திக், 29; சங்கனுார் ரோட்டிலுள்ள கனகதுர்கா பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். பைனான்சில் இருந்து, பலருக்கு, 19.4 லட்சம் ரூபாய் வாகன கடன் கொடுத்தார். ஆனால், மனைவி தனப்பிரியா பெயரில், 'சாய்பாபா அசோசியேட்ஸ்' நிறுவனம் துவங்கி, அந்நிறுவனம் மூலம் கடன் கொடுக்கப்பட்டதாக மாற்றி, மோசடி செய்தார். வாடிக்கையாளர்களிடம் வாகன காப்பீடு தொகை பெற்று, அதை இன்சூரன்ஸ் செய்யாமல் போலியான ரசீது கொடுத்து ஏமாற்றினார்.மாநகர குற்றப்பிரிவு போலீசார், இவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X