Election for BJP president post after 2019 Lok Sabha elections: Amit Shah | 2024-ல் பிரதமர் வேட்பாளர்?: அமித்ஷா | Dinamalar

2024-ல் பிரதமர் வேட்பாளர்?: அமித்ஷா

Added : டிச 09, 2018 | கருத்துகள் (40)
2024-ல் பிரதமர் வேட்பாளர்?: அமித்ஷா

புதுடில்லி: 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பிறகு பா.ஜ. தலைவர் தேர்தல் நடைபெறும் தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

ஹிந்தி நாளிதழ் ஒன்றின் நிகழ்ச்சி டில்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா பேசியது, வரும் 2019 -ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரே பா.ஜ. தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அதுவரை தற்போது உள்ள நிர்வாகிகள் அதே பொறுப்பில் தொடர்வர் என்றார்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நீங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு எனக்கு முன்பாக பிரதமர் வேட்பாளராக 15 மூத்த தலைவர்கள் உள்ளனர். அப்படி அறிவிப்பு வர வாய்ப்பில்லை. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.வுக்கு சாதகமான முடிவு வரும் என்றார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X