நகைக்கு தாக்கப்பட்ட மூதாட்டி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைக்கு தாக்கப்பட்ட மூதாட்டி சாவு

Added : டிச 09, 2018

ஓமலூர் ஓமலூர், பாலிக்கடையைச் சேர்ந்த, சின்னப்பையன் மனைவி லட்சுமி, 55. நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு வெளியே, வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள், அவரை தாக்கி, 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை, குடும்பத்தினர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை, அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், தலையில் தாக்கியதால், சுயநினைவு இழந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, வழிப்பறி வழக்கை, கொலை செய்து, நகையை பறித்ததாக மாற்றி, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும், இன்ஸ்பெக்டர் சக்ரபாணி தலைமையில் தனிப்படை போலீசார், வீட்டின் அருகேவுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X