சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.10 லட்சம் கேட்டு ஆசிரியர் கடத்தல்: 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

Added : டிச 09, 2018
Advertisement

வாழப்பாடி: தனியார் பள்ளி ஆசிரியரை, 10 லட்சம் ரூபாய் கேட்டு, மர்ம கும்பல் கடத்தியது. போலீசார், 12 மணி நேரத்தில், பட்டுக்கோட்டையில் ஆசிரியரை மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, ஊமத்தநாட்டை சேர்ந்தவர், மணிகண்டன், 30. இவரது மனைவி, நேயா, 27. இவர்களது மகன், சாய்ரித்விக், 1. இவர்கள் தற்போது, சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வசிக்கின்றனர். முத்தம்பட்டியிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மணிகண்டன் கணினி ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு பள்ளியில் இருந்தபோது, அவரது மொபைல்போனுக்கு அழைப்பு வந்தது. அங்கிருந்து வெளியேறியவர், வீட்டுக்கோ, பள்ளிக்கோ திரும்பவில்லை. இந்நிலையில், 'மணிகண்டனை கடத்தியுள்ளோம். 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுகிறோம்' என, அவரது தந்தை ராஜேந்திரனுக்கு, மர்ம நபர்கள் போன் செய்தனர். இதுகுறித்து, வாழப்பாடி போலீசில், நேயா புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் விசாரித்ததில், கடத்தல் கும்பல், பட்டுக்கோட்டையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, கரம்பயத்தில், கும்பலை வளைத்தனர். மணிகண்டனை விட்டுவிட்டு கும்பல் தப்பியது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் கூறியதாவது: 'சைலோ' காரில் வந்த ஐந்து பேர், 'கஜா' புயல் நிவாரணத்துக்கு பார்க்க வந்துள்ளோம் என, கூறியுள்ளனர். அவர், வாழப்பாடிக்கு வந்து, மெழுகுவர்த்தி வாங்கி கொடுத்தார். அதை, காரில் வைத்து விடுமாறு, கும்பல் தெரிவித்தது. வைக்க முயன்றபோது, திடீரென காருக்குள் தள்ளிய கும்பல், அவரை கடத்திச்சென்றது. இதுதொடர்பாக, பட்டுக்கோட்டையில் ஒருவரை பிடித்து விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X