சுற்றுலா பயணிகளிடம் பைக், மொபட் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளிடம் பைக், மொபட் திருட்டு

Added : டிச 09, 2018

மேட்டூர்: மேட்டூருக்கு, சுற்றுலா வந்தவர்களின் பைக், மொபட்டை திருடிய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல், பள்ளிபாளையம், சத்யா நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன், 31. இவர், அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ளார். நேற்று காலை, தன் புதிய, 'யமஹா' பைக்கில், மேட்டூர் வந்தார். அணை பூங்காவை சுற்றிப்பார்த்த பின், சேலம்கேம்ப் பாலத்தில், பைக்கை நிறுத்திவிட்டு, 16 கண் மதகு பாலத்தை பார்வையிட்டார். அப்போது, மர்மநபர்கள், அவரது பைக்கை திருடிச்சென்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, கொத்தூரைச் சேர்ந்த, கட்டடத் தொழிலாளி கமல், 28. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் தங்கி கட்டட வேலை செய்கிறார். நேற்று, டி.வி.எஸ்., மொபட்டில், சக தொழிலாளி சித்தனுடன், மேட்டூருக்கு சுற்றுலா வந்தார். மாலை, அவர்கள் புறப்பட்டனர். மேட்டூர் அடுத்த, சமத்துவபுரம் அருகே, மர்மநபர்கள், மொபட்டை நிறுத்தி, இருவரையும் கத்தியை காட்டி மிரட்டினர். அவர்களிடமிருந்த, 1,300 ரூபாய், மொபட்டை பிடுங்கிக்கொண்டு, அவர்கள் தலைமறைவாகினர். இரு சம்பவங்கள் குறித்து, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X