அரசு விழாவில் மோதல்: நிர்வாகி விரட்டியடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு விழாவில் மோதல்: நிர்வாகி விரட்டியடிப்பு

Added : டிச 09, 2018

ஆரணி: அரசு விழாவுக்கு அழைப்பு விடுக்காததால், அ.தி.மு.க., மாவட்ட செயலாளரிடம் மோதலில் ஈடுபட்ட நிர்வாகி விரட்டியடிக்கப்பட்டார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக செய்யாறு எம்.எல்.ஏ., தூசி மோகன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட பொருளாளராக, ஆரணியை சேர்ந்த நித்யானந்தம் உள்ளனர். இருவருக்கும் இடையே, அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிக்கு மோகன், நித்யானந்தத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவதில்லை. நேற்று முன்தினம், ஆரணியில், நகராட்சி சார்பாக புதிதாக கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை கட்டட திறப்பு விழா நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, ''அரசு விழா, கட்சி நிகழ்ச்சிக்கு, ஏன் எனக்கு அழைப்பிதழ் அனுப்புவதில்லை,'' எனக்கேட்டு, மோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த மோகன், நித்யானந்தத்தை பிடித்து தள்ளிவிட்டார். அங்கிருந்த, போலீசார் அவரை விரட்டி அடித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X