டூவீலர் திருடனை மடக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர் திருடனை மடக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள்

Added : டிச 09, 2018

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, டூவீலர் திருடிய வாலிபரை, பொதுமக்கள், மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
புன்செய்புளியம்பட்டி அடுத்த, கோப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 35. மில் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, காவிலிபாளையத்தில் உள்ள உறவினர் வீடு சென்றார், தனது, ஸ்பிளண்டர் பைக்கை அங்குள்ள காமாட்சியம்மன் கோவில் முன், நிறுத்தினார். திரும்பியபோது, ஒரு வாலிபர், பழனிசாமியின் டூவீலரை திருட முயற்சித்துள்ளான். பொதுமக்களை கண்டு, அங்கிருந்து, டூவீலரில் தப்பினான். அக்கம் பக்கத்தினர், 50க்கும் மேற்பட்டோர், டூவீலரில், தப்பிய திருடனை, 5 கி.மீ., விரட்டிச் சென்று மடக்கினர். பின், புன்செய்புளியம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பெருந்துறை அடுத்த, காஞ்சிக்கோவில் அருகே, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த, பிரகாஷ், 28, என, தெரிந்தது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X