பொது செய்தி

இந்தியா

கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை

Added : டிச 09, 2018 | கருத்துகள் (11)
Advertisement
ஜிஎஸ்டி, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், மத்திய நிதியமைச்சகம்

புதுடில்லி : கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், கட்டுமான பணிகள் நிறைவுபெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது. இருப்பினும் கட்டுமான பணி தொடங்கும் போதோ அல்லது கட்டுமானம் முடிந்து நிறைவு சான்று பெறப்படாமலோ உள்ள வீடுகளை வாங்கினால் ஜிஎஸ்டி விதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு வீடு திட்டம், ராஜிவ் ஆவாஸ் யோஜனா, பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கான 8 சதவீதம் ஜிஎஸ்டியை கட்டுமான நிறுவனங்கள் தங்களது வரி வரவில் இருந்து கழித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-டிச-201814:18:38 IST Report Abuse
Pugazh V 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக வீடுகள் கட்டுகிறதா? டுமிளன் ஸன் சிறந்த கருத்து எழுதியுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-டிச-201813:53:07 IST Report Abuse
தமிழ்வேல் சிமிண்ட், கல்............. எல்லாம் வாங்கும்போது gst வாங்குவதில்லையா ?
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
09-டிச-201811:18:17 IST Report Abuse
Chanemougam Ramachandirane இருப்பினும் கட்டுமான பணி தொடங்கும் போதோ அல்லது கட்டுமானம் முடிந்து நிறைவு சான்று பெறப்படாமலோ உள்ள வீடுகளை வாங்கினால் ஜிஎஸ்டி விதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முரண் பாடாக உள்ளது ஒரு தலை பட்சமாக செயல் படுகிறது அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை அமுல் படுத்திய பின் GST வரி விதிப்பை எல்லா கட்டுமானங்களுகும் விலக்கு அளிக்கும் இதுதான் அரசு செயலாகும் பாரா பட்சம் பார்க்க கூடாது கட்டுமானம், விற்பனை இதனால் பாதிக்கப்படுவது கட்டிட தொழிலாளிகள் கட்டிட தொடர்புடைய வியாபாரங்கள் பாதிக்கப்படும் வேலை இழப்பர் என்பதினை அரசு உணர்ந்து செயல் படணும் மத்தியில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து அரசு சட்டத்தில் திருத்தும் செய்யணும் infrastructure எந்தளவுக்கு வருகிறதோ அந்த அளவுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்பதினை உனரனும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X