பொது செய்தி

இந்தியா

கேரளாவில் 4வது சர்வதேச விமான நிலையம் திறப்பு

Added : டிச 09, 2018 | கருத்துகள் (22)
Share
Advertisement
கண்ணூர்: கேரளாவில் கண்ணூர் விமான நிலையத்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர். இதன் மூலம், இந்தியாவில் 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலம் என்ற பெருமை கேரளாவிற்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே அங்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோட்டில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.இன்று(டிச.,9) திறக்கப்பட்ட கண்ணூர் விமான நிலையம் 2 ஆயிரம்
கண்ணூர், விமான நிலையம், சர்வதேச விமான நிலையம், கேரளா, பினராயி விஜயன், சுரேஷ் பிரபு, காங்கிரஸ், பா.ஜ.,

கண்ணூர்: கேரளாவில் கண்ணூர் விமான நிலையத்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர். இதன் மூலம், இந்தியாவில் 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலம் என்ற பெருமை கேரளாவிற்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே அங்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோட்டில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

இன்று(டிச.,9) திறக்கப்பட்ட கண்ணூர் விமான நிலையம் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் தினசரி 2 ஆயிரம் பயணிகளையும், ஒரு ஆண்டிற்கு 15 லட்சம் பயணிகளையும் கையாளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையின் தூரம் 3,050 மீட்டர் ஆகும். இதனை4 ஆயிரம் மீட்டராக உயர்த்தி கொள்ளவும் வசதி உள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊர் கண்ணூர் ஆகும்.

இன்று நடந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் மற்றும் பா.ஜ., புறக்கணித்தன. சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., புறக்கணித்துள்ளது. முன்னாள் முதல்வர் உமண் சாண்டிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனக்கூறி காங்கிரஸ் புறக்கணித்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. விமான நிலையத்திற்கான நிலம் கையகபடுத்தும் பணி அச்சுதானந்தன் ஆட்சியின் போது தான் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு. கூடுவாஞ்சேரி. தமிழகத்தில் ஒரு சின்ன பொட்டி கடைகாரன் கூட ரயில்வே லெவல் கிராஸிங்களுக்கு பதிலாக சுரங்கப்பாதை அமைப்பதற்கு தடையாக இருந்து பல வருட நீதிமன்ற போராட்டங்களுக்கும் மக்களின் இடர்களுக்கு பிறகே சுரங்க வழி அமைந்துள்ளது. மிகவும் நல்ல மனிதர்கள்.
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
10-டிச-201812:34:47 IST Report Abuse
சுந்தரம் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நான்கு சர்வதேச விமான நிலையங்கள் செயல்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டு பாஜக காரன்தான்,இந்தியாவில் 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலம் என்ற பெருமை கேரளாவிற்கு கிடைத்துள்ளது என்று சொல்கிறான். உண்மை இப்படி இருக்க நீங்கள் தமிழ்நாட்டுக்காரனை குறை சொல்வதில் நியாயம் இல்லை....
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
09-டிச-201821:22:51 IST Report Abuse
Elango மிக சரியான புரிதல் தமிழ் செல்வன்.... நம் கோவையில் புகழ் பெற்றிருந்த மில் பல காணாமல் போக காரணம் இந்த உண்டியல் குலுக்கல் கும்பல் தான்... இதில் வைகோ சீமான் போன்ற தமிழ் போராளிகள் திருமா போன்ற பெண் கடத்தல் கட்டப் பஞ்சாயத்து கும்பல் வேறு....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-டிச-201818:48:14 IST Report Abuse
Pugazh V டுமிளர்ஸன் தாத்தா... நான் எங்கே பாஜகவுக்கு 25 உறுப்பினர்கள் என்று சொன்னேன்? பிற கட்சி களின் கேரள கிளைகள் எள்ளி நகையாடுகின்றனர் என்று தானே சொல்லியிருக்கிறேன். சரியா படிங்க தாத்தா. கண்ணூர் விமான நிலையம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பாஜக அமைச்சரை வயவேற்க பாஜக தொண்டர்களை காணவில்லை. கேரள டி.வி.களில் காட்டுகிறார்கள் பாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X