கலெக்டர் ஆபிஸ்லயும் சரி...பங்களாவுலயும் சரி | Dinamalar

கலெக்டர் ஆபிஸ்லயும் சரி...பங்களாவுலயும் சரி

Added : டிச 11, 2018
Share
புரூக் பீல்ட்ஸ் மாலுக்கு, மாலை நான்கு மணிக்கே வருவதாக சொல்லியிருந்தாள் மித்ரா. மணி 5:10 ஆகியும் ஆளைக் காணோம். அங்கிருந்த படிகளில் அமர்ந்து, வாட்ஸ் ஆப்பில் கண்களை ஓட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.திடீரென முதுகில் ஜில்லென்ற உணர்வு. பின்னால் நின்றிருந்த மித்ரா, கையில் வைத்திருந்த இரண்டு ஐஸ்கிரீம்களில் ஒன்றை, ஒழுக விட்டபடி நின்றிருந்தாள்.''சாரிக்கா...பொள்ளாச்சி வரைக்கும்
 கலெக்டர் ஆபிஸ்லயும் சரி...பங்களாவுலயும் சரி

புரூக் பீல்ட்ஸ் மாலுக்கு, மாலை நான்கு மணிக்கே வருவதாக சொல்லியிருந்தாள் மித்ரா. மணி 5:10 ஆகியும் ஆளைக் காணோம். அங்கிருந்த படிகளில் அமர்ந்து, வாட்ஸ் ஆப்பில் கண்களை ஓட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.திடீரென முதுகில் ஜில்லென்ற உணர்வு. பின்னால் நின்றிருந்த மித்ரா, கையில் வைத்திருந்த இரண்டு ஐஸ்கிரீம்களில் ஒன்றை, ஒழுக விட்டபடி நின்றிருந்தாள்.''சாரிக்கா...பொள்ளாச்சி வரைக்கும் போயிருந்தேன். மேம்பால வேலை நடக்குதுன்னு, சுத்த விட்டுட்டாங்க. அதான் லேட்,'' என்று ஐஸ்கிரீமை கையில் கொடுத்து 'கூல்' படுத்தினாள்.''சரி...சரி. பொள்ளாச்சில என்ன விசேஷம்?''''பொள்ளாச்சியில் பெருசா ஒண்ணுமில்ல. பொள்ளாச்சிக்கு போற பஸ்சுலதான், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியாமலே டிக்கெட் ரேட்டை ஏத்திட்டாங்க,'' என்றாள் மித்ரா.''அதெப்படி ஏத்தலாம்''''இது சம்பந்தமாதான் இப்ப, போக்குவரத்து கழக அதிகாரிங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் புகைச்சல் போயிட்டிருக்கு,'' என்றாள் மித்ரா.''இதுல புகைச்சலுக்கு என்ன இருக்கு...அரசுக்கு வருமானம்தானே...,''''கேளு... பிரைவேட் பஸ்காரங்க கலெக்டர், ஆர்.டி.ஓ.,கிட்ட முறைப்படி லெட்டர் குடுத்துதான், ரேட்டை ஏத்தியிருக்காங்க...ஆனா, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிங்க, அவங்க இஷ்டத்துக்கு உயர்த்திட்டாங்களாம். அப்ப மாவட்ட நிர்வாகம், ஆர்.டி.ஓ., அதிகாரிங்களை விட, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிங்க கூடுதல் அதிகாரம் உள்ளவங்களான்னு, மாவட்ட நிர்வாகம் செம கடுப்புல இருக்கு. அதான் புகைச்சல்,'' என்றாள் மித்ரா.''புகைச்சல்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது...வெள்ளலுார் குப்பை கிடங்கை மூடப்போறாங்களாமே...,'' என்று கேட்டாள் சித்ரா.''அட போக்கா... விவரம் புரியாதவளா இருக்கியே... 'ஸ்வட்ச் பாரத்' திட்டத்துல, ஒவ்வொரு வருஷமும் மத்திய அரசு நிதி ஒதுக்குது. அந்த பணத்தை 'லம்பா' அடிக்குறதுக்காக, ஏகப்பட்ட திட்டங்களை கார்ப்பரேஷன் அதிகாரிங்க தயாரிச்சு வச்சிருக்காங்க. அதை செயல்படுத்துறாங்களோ... இல்லையோ... இப்படித்தான் படம் காட்டுவாங்க,'' என்று சிரித்தாள் மித்ரா.''ஓகோ...இதுல இப்படியெல்லாம் இருக்கா,''''ஆமா...குப்பையை அள்ளுறாங்களோ இல்லையோ... கோடிக்கணக்குல ஒதுக்குற கரன்சி கரைஞ்சிரும். அடுத்த மாசம், 'ஸ்வட்ச் சர்வேக்ஷன்' குழு, நம்மூருக்கு வரப்போகுது. 'எப்படியெல்லாம் வேலை', பார்க்கலாம்னு இப்பவே யோசிச்சிட்டு இருக்காங்க. ஆத்மார்த்தமா செஞ்சா... நம்மூர குப்பையில்லா நகரா மாத்தலாம். ஆனா, கரன்சிய எண்ணுறதுலதான், இன்ஜினியருங்க குறியா இருக்காங்க,'' என்றாள் மித்ரா.''அதை விடு. துடியலுார் போலீசை பார்த்தாலே, அந்த ஏரியா பெரிய மனுசங்க ஓட்டம் எடுக்கறாங்களாம்,'' என்று அடுத்த மேட்டருக்கு, 'ஜம்ப்' ஆனாள் சித்ரா.''ஏனாமா?''''செம இன்ட்ரஸ்டிங்...கேளு. துாத்துக்குடி அ.ம.மு.க., பிரமுகர் கோவை வந்தப்ப, அவரை கொலை செஞ்சு சின்னதடாகம் பக்கத்துல இருக்கற, வரப்பாளையம் கிணத்துல போட்டுட்டாங்க...அது குப்பை போடற தண்ணி இல்லாத கிணறு. பாடிய போட்ட பிறகு, 50 லோடுக்கு மேலே குப்பைய போட்டுட்டாங்க.. அத்தனை குப்பையும் அள்ளினால்தான், பாடியை எடுக்க முடியும்,''''அடடே...''''அதனால, 20 நாட்களுக்கு மேல துடியலுார், தடாகம் போலீஸ்காரங்க கிணத்துல இருந்து குப்பையை அள்ளுற வேலைய கண்காணிச்சிட்டு இருக்காங்க. இன்னும் பாடி கிடைக்கல... இந்த வேலைக்காக கிரேன், பொக்லின் செலவுன்னு தினமும் ஆயிரக்கணக்கா செலவாகுது. அந்த ஏரியா பெரிய தலைகள்கிட்ட உதவி கேட்டு வாங்கி, இந்த வேலையை செஞ்சிட்டு இருக்காங்க,''''அடப்பாவமே...''''எங்கே போலீஸ் நம்மகிட்டே, உதவி கேட்டுருவாங்களோன்னு பயந்து, பல பெரிய தலைங்க வெளியே நடமாடுறதையே குறைச்சிட்டாங்க'' என்றாள் சித்ரா.''நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன். பந்தோபஸ்த் டியூட்டியில ஈடுபடுற போலீஸ்காரங்க, மொபைல்போன் பயன்படுத்தக்கூடாதுன்னு, சமீபத்துல டி.ஜி.பி., உத்தரவு போட்டாரு''''ஆமா...கேள்விப்பட்டேன்''''இந்த உத்தரவு வந்த பிறகு, எஸ்.பி., பாண்டியராஜன், போன வாரம் பொள்ளாச்சிக்கு போயிருந்தார். அப்ப பந்தோபஸ்த் போலீஸ்காரங்க சிலபேரு, மொபைல்போனே கதின்னு கிடந்ததை பார்த்திருக்கார். டென்ஷன் ஆனவரு, உடனே பத்துக்கும் மேற்பட்ட போலீஸ்காரங்ககிட்ட இருந்து, மொபைல்போன்களை பிடுங்கிட்டு வந்துட்டாரு''''சூப்பர்''''அதுக்கு பிறகுதான், எல்லா போலீஸ்காரங்களும் பந்தோபஸ்த் டியூட்டியை, தீயா பார்த்திருக்காங்க. இதை கேள்விப்பட்டு, சம்பந்தப்பட்ட போலீஸ்காரங்கள, 'வார்ன்' பண்ணி மொபைல்போனை திருப்பி குடுத்திருக்காரு,'' என முடித்தாள் சித்ரா.இதற்குள் ஐஸ்கிரீம் காலியாகியிருந்தது. மித்ரா குல்பியும், சித்ரா இன்னொரு ஐஸ்கிரீமும் வாங்கி மீண்டும் சுவைக்கத் துவங்கினர்.''விமான நிலைய விரிவாக்கத்துக்கு, நிலம் கையகப்படுத்திட்டு, லேண்ட் ஓனர்களுக்கு இன்னும் பணம் செட்டில் பண்ணலையாமே... உண்மையா'' என்று கேட்டாள் சித்ரா.''அக்மார்க் உண்மை. ஆனா நம்ம மாவட்ட அதிகாரி பணம் செட்டில் பண்ணியாச்சுன்னு தகவல் பரப்பி விட்டுட்டு இருக்காரு'' என்றாள் மித்ரா.''என்ன கொடுமை இது... லேண்ட் ஓனருங்க சும்மாவா இருக்காங்க''''இந்த பிரச்னையை தி.மு.க., எம்.எல்.ஏ., கையில் எடுத்துக்கிட்டு, அடிக்கடி அறிக்கை விட்டுட்டு, நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்துட்டு இருக்காருல்ல.. இதை தடுக்கத்தான் நம்ம அதிகாரி இப்படி பொய் தகவலை பரப்பிட்டு இருக்காரு...'' என்றாள் மித்ரா.''இதனால அவருக்கு என்ன லாபம்''''லாபம் இல்லாமலா...இந்த விசயத்தை இவர் கச்சிதமா செஞ்சுட்டிருக்கறதால... மினிஸ்டர்கிட்ட நல்ல பேரு வாங்கி, இங்கேயே தொடர்ந்து குப்பை கொட்ட முடிவு பண்ணிட்டாருன்னு, ஒரு டாக் ஓடிட்டு இருக்கு'' என்றாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''சரி இதைக் கேளு. கலெக்டர் பங்களாவுல வேலை பார்த்திட்டிருந்த பி.ஏ.,வை வலுக்கட்டாயமா, பயிற்சிங்கற பேருல டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்களாம். அதனால, கலெக்டர் ஆபிசுல மட்டுமில்லாம, பங்களாவுலயும் இனி, 'பவர் பாண்டி' ஆட்சிதான்னு பேசிக்கிறாங்க'' என்றாள்.''சரி... கலெக்டர் பி. ஏ. (பொது) போஸ்டிங்குக்கு யாரு வர்றா''''நெறய பேரு டிரை பண்ணிட்டிருக்காங்க. முக்கியமா, பழைய லேடி ஆர்.டி.ஓ., ரொம்பவே மெனக்கெட்டுட்டு இருக்காங்களாம்... இந்த அம்மாவுக்கு, மேலிட சிபாரிசு அதிகம்ங்கறதால, அவங்கதான் அடுத்த பி.ஏ.,ன்னு பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.அதை கேட்ட மித்ரா, ''இன்னொரு மேட்டர் கேள்விப்பட்டியா...ரிட்டயர்ட் நீதிபதிகிட்ட ஒரு குரூப் 40 லட்சம் ரூவா ஆட்டைய போட்டுட்டாங்க'' என்றாள் மித்ரா.''இல்லை...சொல்லு''''அனுமான் படை பேரை சொல்லிக்கிட்டு, நம்மூர்ல ஒரு ஆள் சுத்திட்டிருக்காரு. அந்தாளு கூட, ஒரு பெண் சாமியாரும் இருந்தாரு. இவங்க ரெண்டு பேரையும் ஒரு புரோக்கர் மூலமா, வடமாவட்ட ரிட்டயர்டு ஜட்ஜ் ஒருத்தரு கான்டாக்ட் பண்ணி, கவர்னர் போஸ்ட்டிங் வாங்கித்தர முடியுமான்னு கேட்டிருக்காரு''''அப்பாடி...கவர்னர் பதவிக்கே பேரம் பேசுறாங்களா''''அப்படில்லாம் வாங்கிற முடியுமா என்ன...மேல கேளு...நாலு கோடி ரூபா கேட்டு, முதல் தவணையா 40 லட்சம் ரூபா கை மாறியிருக்கு. இதுக்கு நடுவுல, அனுமான் படை தலைவரும், அந்த லேடி சாமியாரும் பிரிஞ்சுட்டாங்க''''அப்ப 40 லட்சம் ரூபா என்னாச்சு''''அது அவ்வளவுதான். புரோக்கர், லேடி சாமியாரு உதவியோட மூணு பேரும் இப்ப போலீஸ்ல கம்ப்ளையின்ட் குடுத்திருக்காங்க. இப்ப போலீஸ்ல இதான் ஹாட் டாபிக்'' என்று முடித்தாள் மித்ரா.அப்போது பின்னால் உள்ள படிகளில் அமர்ந்திருந்த இருவர், 'டேய் ஸ்ரீதர்...அப்பவே அந்த ரியல் எஸ்டேட் அசோக்கிட்ட, சாவகாசம் வேண்டாம்னு சொன்னேன். அந்த நிர்மலா கூட சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட்டேல்ல. இப்ப அனுபவி' என்று பேசிக் கொண்டிருந்தனர்.அதைக் கேட்டு அர்த்தபுஷ்டியுடன் சிரித்த சித்ராவும் மித்ராவும், எழுந்து ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X