சீனியருக்கு தண்ணி காட்டிய ஜூனியர்!

Added : டிச 11, 2018 | |
Advertisement
பரபரப்பு நிறைந்த மங்கலம் பெரியாண்டிபாளையம் ரோட்டில், சித்ராவும், மித்ராவும், வண்டியில் சென்று கொண்டிருந்தனர். ''அக்கா... ஏதோ கோவில் விசேஷத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க. இன்னுமா கோவில் வரலை,'' மித்ரா கேட்டாள்.''சும்மா.. தொணதொண்ங்காம வாடி. கோவிலுக்கு வந்துட்டோம்,'' என்று வண்டியை பார்க் செய்தாள் சித்ரா. பந்தலில், பெண்கள் பொங்கல் வைத்து கொண்டிருந்த,
 சீனியருக்கு தண்ணி காட்டிய ஜூனியர்!

பரபரப்பு நிறைந்த மங்கலம் பெரியாண்டிபாளையம் ரோட்டில், சித்ராவும், மித்ராவும், வண்டியில் சென்று கொண்டிருந்தனர். ''அக்கா... ஏதோ கோவில் விசேஷத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க. இன்னுமா கோவில் வரலை,'' மித்ரா கேட்டாள்.''சும்மா.. தொணதொண்ங்காம வாடி. கோவிலுக்கு வந்துட்டோம்,'' என்று வண்டியை பார்க் செய்தாள் சித்ரா. பந்தலில், பெண்கள் பொங்கல் வைத்து கொண்டிருந்த, குட்டீஸ் அங்குமிங்கும் விளையாடி கொண்டிருந்தனர்.இருவரும் அம்மனை தரிசித்து விட்டு மண்டபத்தில் அமர்ந்தனர். ''அக்கா... திருவிழாவில் அப்டியென்ன விசேஷம்?''''அட... 14 வருஷத்துக்கு முன் ஏற்பட்ட சண்டையில விழா நின்னுடுச்சாம். அதுக்கப்புறம் இப்பதான் பொங்கல் விழா நடக்குது. யாருக்கும் முதல் மரியாதை கிடையாதாம். சிறுசு முதல் பெரிசு வரைக்கும் ஒரே சந்தோஷமாம்,''''ஏங்க்கா... இதே மாதிரி எல்லா பக்கமும் இருந்தா, எவ்ளோ நல்லாயிருக்கும்,'' மித்ரா சொன்ன போது, அருகில் உட்கார்ந்திருந்த இருவர், கலெக்டர் அலுவலகம் பற்றி பேசினர்.அதைக்கேட்ட அவள், ''ஏ.டி., லெவல் அதிகாரியே, 2 ஆயிரம் கொடுத்தாத்தான் வேலை நடக்குதுன பார்த்துக்கோ,'' என்றாள் மித்ரா.''எந்த 'ஏடி'.... எந்த ஆபீசுனு தெளிவா சொல்லுடி?''''பி.ஏ., டூ பி.டி., ஆபீசைத்தான் சொல்றேன். அங்க இருக்கற மேல் அதிகாரி ரொம்ப சாதுவாம். நிர்வாகத்துல இருக்கற ஒரு 'டெபுடி' தான் இவ்ளோ அலப்பறையாம். செக் ஷனில், பிரமோஷன், 'டிரான்ஸ்பர்' என்ன நடந்தாலும், 'கமிஷன்' வெட்டியாகணுமாம்,''குறிப்பா, எந்த பிளாக்கிற்கு டிரான்ஸ்பர் வேணும்னு கேட்கிறமோ, அந்த இடத்துக்கே வாங்கிக்கலாம். ஆனா, அதுக்கு, 2 ஆயிரம் வெட்டணுமாம். எனக்கே தண்ணி காட்டிட்டாருன்னு ஒரு அதிகாரியே புலம்பியிருக்கார்னா பார்த்துக்கோயேன்,'' என்றாள் மித்ரா.''அப்படீனா, மேலிடத்து சப்போர்ட் ஜாஸ்தியோ?''''இப்படி 'டெபுடி'யா, இருந்துட்டு, நல்லா 'கல்லா' கட்டிட்டு, யாருகிட்ட எடுபுடியா இருக்கிறாருன்னு தெரியலை. நம்ம பெரிய ஆபீசரும் கண்டுக்க மாட்டேங்கறாருங்க்கா,''அப்போது, ஒரு சிறுவன் ஓடவே, ''டேய்... 'மணிகண்டா'.. ஓடாதேடா.. தடுக்கி உழுந்திடுவ,'' என்று தாயார் சத்தம் போட்டார்.அதற்குள், மித்ரா, பிரசாதம் வாங்கி வரவே இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.''எம்.எல்.ஏ., 'டைம்' கொடுக்காம இருக்கறதால, தெற்கில், 'அம்மா ஸ்கூட்டி' ஓடாம இருக்கு'' என்றாள் சித்ரா.''இவரு, ஏன் இப்படி முரண்டு புடிக்கிறாரு?''''இதுல மட்டுமில்லடி... இப்படி பல விஷயங்களில், 'மாஜி'கூட 'டூ' விட்டுவிட்டு தனியாவர்த்தனம் வாசிக்கிறார். கஜா புயல் நிவாரணத்தில் கூட, தன்னோட ஆட்களை வைச்சு, பொருளை கலெக்ட் பண்ணி கொடுத்தார். இவங்க சண்டையை மேலிடமும் கண்டுக்கறதில்லை,''''அட... அதை விடுங்க்கா. மறுபடியும் மல்லுக்கட்டு ஆரம்பமாயிடுச்சு, தெரியுங்களா?''''சொன்னதானே தெரியும்?''''கூட்டுறவு விற்பனை சங்க சொைஸட்டி தலைவர் பதவிய பிடிக்க பெரிய 'போர்' நடந்து ஓய்ந்திருக்கு. பகுதி செயலாளருக்கு கிடைக்காத பதவி, மா.செ., குரூப்புக்கு கிடைக்க கூடாதுனு, மூணு எம்.எல்.ஏ.,க்களும் கூட்டா சேர்ந்து, தடுத்திட்டாங்க. இப்ப மீண்டும் தேர்தல் அறிவிச்சிருக்காங்க. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்,''என்றாள் சித்ரா.அப்போது, மொபைல் போனில் ஒருவர், 'ஆமாங்... காங்கேயம்தான் போறனுங்க. அப்படியே உங்களை வந்து பார்த்துடறேன்,' என்று பேசியபடியே நடந்து சென்றார்.அதைக்கேட்ட சித்ரா, ''ஏய்.. மித்து! வேலையின்னு வந்துட்டா நம்ம காங்கயம் சப்-டிவிஷன் போலீசார் வெள்ளைக்காரன் மாதிரியாம்,''''என்னக்கா.... சினிமா டைட்டில்லாம் சொல்றீங்க!''''அட... முழுசா கேளு. கிரைம் கேஸ்களில், கைது செய்யப்படும் நபர்களிடம், ஸ்டேஷனில் சாப்பாடு வாங்கி கொடுப்பதில் இருந்து, ஜெயிலுக்கு கூட்டிட்டு போகும்வரை, அவங்ககிட்டயே 'வரி' வசூலிக்கிறாங்களாம்,''''பிற்பாடு, கைதிக்கு செலவு செஞ்ச மாதிரி, கணக்கு காட்டி அதை தனியா வசூல் பண்ணிக்கறாங்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வெள்ளகோவிலில் ஒரு திருட்டு கேஸில், சிக்கியவரிடம், சாப்பாடு, கார் வாடகைன்னு, எக்கச்சக்கமா போட்டு தள்ளிட்டாங்களாம்,''''ஏங்க்கா... மாவட்டத்திலுள்ள பல ஸ்டேஷன்களில் இப்படித்தான் நடக்குதாம். எஸ்.பி., எதையுமே கண்டுக்க மாட்டாங்களா?''''அதே மாதிரி... ஆளுங்கட்சிக்காரங்களும் நடந்துக்கறாங்களாம் தெரியுமா?''''ம்ஹூம்.. சொல்லுங்க... எங்கே!''''லிங்கேஸ்வரர் ஊரில்தான். சமீபத்தில், ஜெ., நினைவுநாள் வந்துதில்ல. அதுக்காக, ஆளுங்கட்சிக்காரங்க, லென்ஸ் வைச்சு தேடற அளவுக்கு பிளக்ஸ் வைச்சாங்க. ஆனா, அதேநேரம், தீபா அணிக்காரங்க, பெரிசு பெரிசா நிறைய இடங்களில் தென்பட்டச்சு,''''இதைப்பார்த்த ஆளுங்கட்சி மூத்தவர் ஒருத்தர், 'நேத்து வந்தவங்க எல்லாம், 'அம்மா'வை மறக்காம இருக்காங்க. ஆனா, நம்மாளுங்க... ஆளுக்கு ஒரு 'பார்' எடுத்துட்டு, ஏதோ வைக்கோணும்னு வெச்சுட்டு ஒதுங்கிட்டாங்க,''''ஆமாங்க்கா... அவங்களுக்கு வருமானம் ஒண்ணுதான் குறிக்கோளுன்னு, பலரும் வெளிப்படையா பேசுறாங்க. இது பரவால்லீங்க. அதே ஊரில், 60 வருஷ கோரிக்கையான அத்திக்கடவு திட்டத்துக்கு டென்டர் விட்டுட்டாங்க,''''ஆமா.. இப்ப அதுக்கென்ன?'' குறுக்கிட்டாள் சித்ரா.''அதுக்கு ஆளுங்கட்சி தரப்பு நிர்வாகிகள் யாருமே நன்றி தெரிவிக்கவே இல்லையாம். இதனால், 'சபா'வுக்கு கோவம் வந்து டோஸ் விட்டிருக்காரு. அதுக்கப்பறம், அடிச்சுப்புடுச்சு, ரெண்டு மூணு பிளக்ஸ் வெச்சு, சமாளிச்சாங்களாம்,''''ஆமாண்டி.. சம்பாரிச்ச பணத்தை இப்ப இருந்து மிச்சம் புடிக்கோணுமில்ல,'' என்று சொன்ன சித்ரா, ''நேரமாச்சு... கிளம்பலாம்,'' என்றாள்.இருவரும், வண்டியில் அமர்ந்து வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது, குடிபோதையில் ரோட்டோரம் ஒருவர் உருண்டார். அதைப்பார்த்த, சித்ரா, ''எச்சு விலைக்கு, மதுபாட்டில் விற்ற விவகாரத்தில், 'டாஸ்மாக்' ஊழியர்கள் சிக்கினாங்க தெரியுமா? அதில், மேல் நடவடிக்கை வேண்டாம்னு, அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்தாங்களாம். ஆய்வு செஞ்ச அதிகாரிங்களும், கமுக்கமாக இருந்துட்டாங்க. விஷயம், பரவ ஆரம்பிச்சதால, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செஞ்சிருக்காங்க,'' என்றாள்.''ஓட்டல், ரெஸ்டாரன்ட்களில் சட்டவிரோத 'சரக்கு' விற்பனையை நிறுத்திட்டாங்க... தெரியுங்களா?''''ஆமாண்டி. கொடை ரோடு, பள்ளபட்டி பகுதியில், ரசாயனம் கலந்த மதுவை, குடிச்சு, ரெண்டு பேர், இறந்தாங்க இல்லையா. அதனால், அலர்ட்ட ஆகிட்டாங்க. பிரச்னை ஆகிடக்கூடாதுன்னு ரெண்டு, மூணு நாள் இந்த கும்பல் கொஞ்சம் அடக்கி வாசிச்சாங்க,''''அப்புறம்?''''அப்புறமென்ன.. வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதைதான்,'' என்ற சித்ரா, சுவற்றில் ஒட்டியிருந்த ஒரு போஸ்டரை பார்த்து விட்டு, ''நம்ம ஊர் போலீஸ் கூட்டணி பத்தி தெரியுமா?''என்றாள்.“போலீசிலும் கூட்டணியா? ஏதாச்சும், புதுசா கட்சி கீது ஆரம்பிக்கிறாங்களா?'' என்று ஆச்சரியப்பட்டாள் மித்ரா.“அட.... அதெல்லாம் இல்ல. கோழிப்பண்ணையூரில் இருக்கற 'மோகன'மான அதிகாரி ஒருத்தர், 'அட்ரஸே' இல்லாத மீடியாக்களோட கூட்டணி போட்டிருக்கார். எந்த விஷயமா இருந்தாலும், எஸ்.பி.,க்கு தகவல் போகுதோ இல்லயோ, உடனே அவங்ககிட்ட 'அப்டேட்' பண்ணிடறாராம்,''“அவர் மட்டுமில்லாம, இன்னும் சிலர், ஒருபடி மேலே போய், அவங்களுக்கு பரிஞ்சு பேசறாங்க. போலீசுக்கு எதுக்காக இந்த புது கூட்டணின்னு, யாருக்குமே புரியாத புதிரா இருக்குது. இது விஷயத்தில், எஸ்.பி., கொஞ்சம் 'ஸ்டெப்' எடுத்தால் பரவாயில்லைன்னு, எல்லாரும் பேசிக்கிறாங்கோ,'' என்ற சித்ரா, வண்டியை முறுக்கினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X