பொது செய்தி

இந்தியா

நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.6.75 லட்சம் கோடி

Added : டிச 11, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.6.75 லட்சம் கோடி

புதுடில்லி: இந்தாண்டு, ஏப்., - நவ., வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட, 15.7 சதவீதம் அதிகம்.இதே காலத்தில், வரி கணக்கு தாக்கல் செய்தோருக்கு திரும்ப அளிக்கப்பட்ட, கூடுதலாக செலுத்திய தொகை, 20.8 சதவீதம் அதிகரித்து, 1.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மத்திய நிதியமைச்சகம், நடப்பு, 2018 -- 19ம் நிதியாண்டில், நேரடி வரிகள் வாயிலாக, 11.50 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயித்து உள்ளது.இதில், மதிப்பீட்டு காலத்தில், நிகர அளவில், 48 சதவீதம் வசூலாகி உள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்கள் வாயிலாக வசூலிக்கப்பட்ட மொத்த வரி, 17.7 சதவீதம் உயர்ந்துள்ளது. தனி நபர் வருமான வரி வசூல், 18.3 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு, ஏப்., - நவ., வரையிலான எட்டு மாதங்களில், தன் விருப்பத்தின் பேரில் வருவாய் விபரங்களை தெரிவிக்கும் திட்டத்தில், 10,833 கோடி ரூபாய் வசூலானது.இவ்வாறு மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
11-டிச-201813:30:31 IST Report Abuse
pattikkaattaan காங்கிரஸ் சிதம்பரத்தைவிட அதிக வரி வசூல் ... ஆனால் அந்த வரிப்பணத்தைக்கொண்டு மக்களுக்கு தரமான சாலை வசதி , மருத்துவ வசதி , கல்வி வசதி , குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு இவையெல்லாம் செய்து கொடுத்தால் அடுத்து ஆட்சிக்கு வரமுடியும் ... வரிப்பணம் எங்குபோனது என்று தெரியாமல் போனால் சங்குதான்
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
11-டிச-201816:38:33 IST Report Abuse
BoochiMarunthuஅம்பானி திருமணத்தை பார்த்தாலே தெரிகிறது எங்கு போனது என்று...
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-டிச-201819:56:53 IST Report Abuse
Pasupathi Subbianஅவன் காங்கிரஸ் காலத்தில் இருந்து சம்பாதித்துக்கொண்டு இருக்கிறான். இப்போ வந்த மாறன் சகோதரர்களின் சம்பாத்தியத்தை பாருங்களேன். அதை கண்டுகொள்ளாமல் ஏன் விட்டுவிடுகிறோம்....
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
11-டிச-201811:18:07 IST Report Abuse
Rajathiraja ஆட்சிக்கு வந்த முதல் வருடம் 45 நாட்களில் வருமானவரி பிடித்தம் மீதிவந்ததாம். ஆனால் இப்பொழுதெல்லலம் 4 மாதங்களாகியும் வருவதில்லையாம். கூடிய வரி வருவாய் எங்கே செல்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
Rate this:
Share this comment
11-டிச-201813:26:24 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்இந்த வருடம் என் மனைவின் வருமான வரி பிடித்தம் ஒரு மாதத்திற்குள் வந்துவிட்டது. திருட்டு கணக்கை காட்டினால் திரும்ப வராது. நேர்மையான கணக்கென்றால் வந்துவிடும். உங்களை பற்றித்தான் தெரியுமே....
Rate this:
Share this comment
Rajathiraja - Coimbatore,இந்தியா
11-டிச-201813:54:21 IST Report Abuse
Rajathirajaஅப்ப நீங்கள் திருட்டு கணக்கையும் உங்கள் மனைவி நேர்மையான கணக்கையும் காட்டுகிறீர்கள் போலும்....
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
11-டிச-201807:01:39 IST Report Abuse
Chanemougam Ramachandirane நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட, 15.7 சதவீதம் அதிகம் ஏன் இந்திய நிதி நிர்வாகம் சிந்தனை செய்யவில்லை அதிகப்படியான வரியினால் கூடுதலாக வந்துள்ளது என்று அதனால் மக்கள் விலை வாசி ஏறி தவிப்பர் என்பதினை உணராமல் செயல் படுகிறது இதற்கு உடனடியாக வரும் வருவாயில் மத்திய அரசு டீசல் விலையை குறைத்து வரியை முற்றுலுமாக நீக்கினால் போக்குவரத்துக்கு முதல் எல்லா பொருட்களுக்கும் விலை குறையும் மக்களுக்கும் விலை வாசி குறையும் போக்குவரத்துக்கு செலவு குறையும் என்பதினை உணர்ந்து உடனடியாக முடிவு எடுக்கணும் ஊடகங்கள் இதை வெளிப்படுத்தனும் நிதி நிர்வாகத்திற்கு எடுத்துரைக்கணும்
Rate this:
Share this comment
RamRahimRobert - Bhakthas Nagaram,இந்தியா
11-டிச-201807:28:16 IST Report Abuse
RamRahimRobertஎப்படி குறைக்கும். அது தான் நூற்று கணக்கான கோடிகளை நம்ம படேல் சிலைக்கு கொடுத்து இருக்கிறார்கள். நாமளும் அந்த சிலைக்கு நம்ம அனுமதி இல்லாமல் தந்து இப்போது நம்மளை கஷ்டபடுத்துகிறார்கள்....
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
11-டிச-201808:19:41 IST Report Abuse
தேச நேசன் கடந்த மூன்று வாரங்களாக பெட்ரோல் விலை குறைந்தபோது டாக்சி ஆட்டோகட்டணமோ குறைவதற்குப் பதில் ஏறின. லாரிகட்டணமும் குறையவில்லை இவர்களுக்கு மானியம் கொடுக்க காங்கிரஸ் பெரிய அளவில் அந்நியக் கடன் வாங்கியது தெரியுமா? அதற்கு நாம்தான் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறோம் உணவுப்பொருட்களின் விலையை உற்பத்திதான் நிர்ணயிக்கிறது போக்குவரத்து செலவு உண்மையில் சிறிதளவுதான் .உற்பத்தி குறைந்தால் போக்குவரத்து செலவு குறைந்தாலும் விலையேறும் . இதுதான் பொருளாதாரம்...
Rate this:
Share this comment
Suresh Shanmugam - Singapore,சிங்கப்பூர்
11-டிச-201811:26:53 IST Report Abuse
Suresh Shanmugamபஸ் கட்டணத்தை ஏற்றி ஸ்கூட்டிக்கு மானியம் கொடுத்த கத காங்கிரஸ் கத....
Rate this:
Share this comment
Rajathiraja - Coimbatore,இந்தியா
11-டிச-201811:31:30 IST Report Abuse
Rajathirajaஇது மாதிரி தப்பு கணக்கு போட்டு தான் எல்லா இடைத்தையும் இழந்துகிட்டு இருக்கீங்க....
Rate this:
Share this comment
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201811:58:27 IST Report Abuse
Niranjanசிலை வைத்த பணத்தை கொண்டு வட்டி கட்டி இருக்கலாமே? நாட்டுக்கு எது முக்கியம் என்று அரசாள்பவர்கள் யோசித்து இருக்கலாமே?...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201814:31:09 IST Report Abuse
தமிழ்வேல் இருக்கிற RBI ஷ்டாக்கையும் கை செலவுக்கு கேட்கிறபோது, இப்புடில்லாம் எப்புடி யோசிப்பாங்க ?...
Rate this:
Share this comment
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
11-டிச-201816:34:02 IST Report Abuse
Selvaraj Thiroomalபெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளதால் டாக்ஸி ஆட்டோக்கள் கட்டணங்களை குறைக்கச்சொல்வது இந்த தொழிலை பற்றி அடிப்படை தெரியாமல் சொல்வதுதான்.. ஒட்டுமொத்த ஆட்டோ சம்பந்தப்பட்ட தொழிலும் கடந்த இரண்டுவருடங்களை போல கடுமையான நெருக்கடியை ஐம்பது வருடத்தில் சந்திக்கவில்லை.. இன்றுவரையில் ""தினசரி விலைநிர்ணயத்தை"",, அதை விற்பனை செய்யும், ஆயில்நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.. அதனால், வாகனஉரிமையாளர் இன்றைய விலைக்கு டீசல் வாங்கினாலும் பழைய வாடகையைத்தான் இன்றுவரை பெறுகிறார்கள் . ஜிஎஸ்டிக்கு முன்பே திட்டமிட்டு ஏற்றப்பட்ட உதிரிபாகங்கள் விலை, பிறகு டீசலைவைத்தே ஏற்றிக்கொண்டு உச்சாணிக்கொம்பில் வைத்துள்ளனர்.. இன்சூரன்ஸ் தொகை ஒவ்வொருவருடமும் ஏற்றப்பட்டே வந்துள்ளது.. ஒன்றா இரண்டா கனக்குச்சொல்ல, ஒட்டுமொத்த சிறுகுறு தொழிலையையும், அதன் முதலாளிகளையும் ஒழித்த பெருமையை கொண்டாடுங்கள்.. அரசு ஒரு " எடுத்துக்காட்டு முதலாளியாக" நடக்கவேண்டும்..ஆனால் நடைமுறை தலைகீழாக உள்ளதே.. ஏன் பஸ்கட்டணத்தை குறைக்க எந்தவொரு மாநில அரசும் முயலவில்லை.. கேட்கலாமே ???...
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-டிச-201820:05:29 IST Report Abuse
Pasupathi SubbianG S T அமுலாக்கத்துக்கு முன் இருந்த விலையை , அதற்க்கு பின் தொலதிபர்கள் குறைக்கவில்லை என்பதே உண்மை. இந்த வரிவிதிப்பு முறைப்படி , கை இருப்பு , அடக்கவில்லை போன்றவற்றை கணக்கிடுவதில் இருந்த நடப்பு குறைபாடு கலையப்பட்டுக்கொண்டு இருப்பதை பார்த்தாலே தெரியும். இன்னமும் முழு வியாபாரமும் ஜி எஸ் டி, நடைமுறை கையாள ஆரம்பித்தால், வரி ஏய்ப்பு என்பது அறவே ஒழிக்கப்பட்டுவிடும், இனி வரும் அரசு இந்த சீர்திருத்தங்களை செவ்வனே நடைமுறைப்படுத்தினால் இந்தியா செழிக்கும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X