சட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன்? காங்., வெற்றி எப்படி?

Added : டிச 11, 2018 | கருத்துகள் (68)
Advertisement
Assembly election Results 2018, Election results 2018,Chhattisgarh election Results 2018,  சட்டீஸ்கர் தேர்தல் முடிவுகள் 2018, சத்தீஸ்கர், காங்கிரஸ், முதல்வர் ரமண் சிங், அஜித் யோகி, மாயாவதி, பாரதிய ஜனதா , மாவோயிஸ்ட் , நக்சல், காங்., பா.ஜ., சட்டீஸ்கர், சட்டீஸ்கர் தேர்தல்,  Congress, Bharatiya Janata,  
Chief Minister Raman Singh, Ajit Yogi, Mayawati,Maoist, Naxal,

ராய்பூர்: சட்டீஸ்கரில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ., இந்த தேர்தலில் தோல்வி அடையவும், காங்கிரஸ் வெற்றி பெறவும் தலா மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.


காங்கிரஸ் வெற்றி பெற மூன்று காரணங்கள்:

1. ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி: சட்டீஸ்கர் மாநிலத்தில், 15 ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சி நடந்து வந்துள்ளது. எந்த கட்சி ஆட்சி இருந்தாலும், இந்த ஆண்டுகள் நீடித்தால் கண்டிப்பாக மக்களிடம் அதிருப்தி ஏற்படவே செய்யும். முதல்வர் ரமண் சிங் மாநிலத்தில் ஓரளவுக்கு பிரபலமானவர் தான். ஆனால், அவர் செய்த நல்ல விஷயங்களை மக்கள் மறந்து விட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள புதிய பிரச்னைகளுக்கு ஆளும் கட்சி மீது குறை கூற தொடங்கினர். இது தான் காங்., வெற்றிக்க முதல் காரணம்.

2. முன்னதாகவே முழித்து கொண்ட காங்கிரஸ்: மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பதை முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் முன்கூட்டியே அறிந்து கொண்டு விட்டது. அதன் பலனை பெற தீவிர முயற்சிகளில் இறங்கியது. ஆளும் கட்சி மீது தொடர்ந்து பல்வேறு புகார்களை முன் வைத்து, ஆளும் கட்சி மீதான மக்கள் அதிருப்தியை மேலும் அதிகரிக்க செய்ததது. அதன் பலன் தேர்தல் வெற்றியாக கிடைத்துள்ளது.

3. அஜித் யோகியால் கிடைத்த லாபம்: இந்த மாநிலத்தை சேர்ந்த அஜித் யோகி, பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். மாநில முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். அவர் காங்கிரசில் இருந்த போது, தனது போட்டியாளர்களாக கருதியவர்களை பல தேர்தல்களில் தோல்வியடைய செய்தவர். கட்சியில் தனக்கு எதிராக யாரும் இருக்க கூடாது என்பதற்காக பிரித்தளும் சூழ்ச்சிகளை மேற்கொண்டவர். இதன் காரணமாக காங்கிரசுக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அவர் காங்கிரசில் இருந்து விலகி ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் என்ற பெயரில் புதிய கட்சி துவங்கிய பிறகு, காங்கிரசில் ஒற்றுமை நிலவ துவங்கியது. அதிருப்தி களையப்பட்டு ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தனர். எனவே, தான் அஜித் யோகி கட்சி தேர்தலில் போட்டியிட்டும், காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பலரும் அஜித் யோகியால் காங்கிரசுக்கு பாதிப்பு வரும் என்றே கருதினர். ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமகவே அமைந்துள்ளது.
பா.ஜ., தோல்விக்கான மூன்று காரணங்கள்:


1. மாவோயிஸ்ட் நக்சல் பிரச்னை: இந்தியாவிலேயே நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் சட்டீஸ்கர் தான். சட்டசபை தேர்தல் நடந்த போது, மாவோயிஸ்ட்கள் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பு விடுத்தனர். 15 நாட்களில், ஆறு தாக்குதல்களை நடத்தி, 13 பேரை கொன்றனர். ஆட்சியில், 15 ஆண்டுகளாக நீடித்தும், மாநிலத்தில் நக்சல் பிரச்னைக்கு தீர்வு காண பா.ஜ.,வால் முடியவில்லை என்பது பெரும் பின்னடைவாக அமைந்து விட்டது.

2. ஏழ்மை, வேலைவாய்ப்பு பிரச்னை: நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலம் சட்டீஸ்கர் தான். மக்கள் தொகையில், 40 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் தான் உள்ளனர். இதே போல், வேலை வாய்ப்பு இன்மை சதவீதம் இங்கு அதிகம். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவானது தான் சட்டீஸ்கர். ம.பி.,யுடன் இப்பகுதி இருக்கும் போது மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருந்தது. தனி மாநிலமாகி, பா.ஜ., ஆட்சியில் ஓரளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், இந்த பிரச்னைகளை முழுமையாக தீர்க்க முடியவில்லை.

3. அஜித் யோகி - மாயாவதி கூட்டணி: அஜித் யோகியின் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கரும், மாயாவதியும் பகுஜன் சமாஜ் கட்சியும், இந்த மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி காங்கிரசுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. ஆனால், ஆளும் கட்சி மீதான அதிருப்தி, பா.ஜ., மீது தலித் மக்கள் கோபம் கொண்டு, யோகி - மாயாவதி கூட்டணி பக்கம் சாய்ந்தது ஆகியவை காங்கிரசுக்கு நல்ல பலனை அளித்து விட்டது. இத்துடன், யோகி - மாயாவதி கூட்டணி, பா.ஜ., வேட்பாளர்களுக்கு எதிராக, அதே ஜாதி மற்றும் மதத்தை சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டுக்களை பிரித்து விட்டனர். இதுவும் பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
12-டிச-201810:56:52 IST Report Abuse
ஜெயந்தன் மோடியும் யோகியும் பிரச்சாரத்திற்கு போகாமல் இருந்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும்......மாநில ஆளும் கட்சிக்கு எதிரான அலை என்பதை விட மோடிக்கு எதிரான அதிருப்தி என்பதே சரி ......இது 2019 இல் இன்னமும் பெரிய அளவில் இருக்கும்......
Rate this:
Share this comment
Cancel
12-டிச-201802:29:13 IST Report Abuse
Ganesan Madurai பிரஸ் கூட்டத்தில் பப்பூஜீ: "EVMல் ஊழல் செய்து வெல்ல முடியும்" அப்ப தேர்தல்ல தோத்த கட்சிதானேயா ஆட்சி அமைக்கணும் பப்பூஜீ? இன்னா
Rate this:
Share this comment
Cancel
12-டிச-201802:28:22 IST Report Abuse
Ganesan Madurai பத்திரிக்கையாளரிடத்தில் பப்பூ: "EVMல் ஊழல் செய்து வெல்ல முடியும்" அப்ப உன்னோட கூட்டணி கெலிச்சது பிராடு பண்ணிதானா? சேம்சைடு கோலா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X