பொது செய்தி

இந்தியா

ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்

Updated : டிச 11, 2018 | Added : டிச 11, 2018 | கருத்துகள் (39)
Share
Advertisement
சக்திகாந்ததாஸ், ரிசர்வ் வங்கி, கவர்னர்

மும்பை : ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸை, மத்திய அரசு நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இவர், மூன்று ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார்.

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து உர்ஜித் படேல், தனது பதவியை, நேற்று ( டிசம்பர் 10) ராஜினாமா செய்தார். இதனிடையே, கவர்னர் பதவிக்கு பல்வேறு அதிகாரிகளின் பெயர்கள் அடிபட்ட நிலையில், சக்திகாந்த தாஸ், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி வகிக்க உள்ளார்.

சக்திகாந்த தாஸ், மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றியவர். மேலும் பொருளாதார விவகாரத்துறை, நிதித்துறை, வேதிப்பொருட்கள் துறை உள்ளிட்டவைகளின் செயலாளாரக சக்திகாந்த தாஸ் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திண்டுக்கல் மாவட்ட கலெக்டராகவும், தமிழக தொழில்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
12-டிச-201811:35:38 IST Report Abuse
ganapati sb உயர்பன நீக்கம் நடவடிக்கை பொது 50 நாட்களில் நிலைமை சீராகும் வகையில் அது நடைமுறை படுத்தும் முறையை கண்காணித்து வசதிகளை மேம்படுத்த போலிகளை களைய தொடர்ந்து பல மாறுதல்களை அறிவிப்புகளை வெளியிட்ட சக்தி கந்த தாஸ் சிறப்பான தேர்வு பாராட்டுக்கள்
Rate this:
Cancel
12-டிச-201800:01:41 IST Report Abuse
நக்கல் சூப்பர்...
Rate this:
Cancel
Raju - jersi,யூ.எஸ்.ஏ
11-டிச-201822:34:13 IST Report Abuse
Raju அடிமை சிக்கியாச்சு . வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X