பொதுத்தேர்தலுக்கு முன் ராஜினாமா: தெரசா மே

Updated : டிச 13, 2018 | Added : டிச 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
பொதுத்தேர்தலுக்கு முன் ராஜினாமா: தெரசா மே

லண்டன்: அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய போவதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார்.


எதிர்ப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் திட்டமிட்டது. இதையடுத்து நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்கும் ஓட்டெடுப்பிலும், வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை, பிரிட்டன் பிரதமர் தெரசா மே, மேற்கொண்டார். இது தொடர்பாக கட்சியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டனர். கட்சி தலைவர் பதவியில் இருந்து இறக்குவதற்கும் ரகசிய கையெழுத்து வேட்டை நடத்தி வந்தனர்.


வெற்றி

இதற்கான மனுவையும் கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவருக்கும் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தெரசா மேவுக்கு எதிராகே நற்று இரவு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பில், மொத்தம் உள்ள 317 எம்.பி.,க்களில் தெரசாமேவுக்கு ஆதரவாக 200 பேரும், எதிராக 117 பேரும் ஓட்டளித்தனர். இதனையடுத்து தெரசா மே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உறுதி

இந்நிலையில், 2022ம் ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலுக்கு முன் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என தெரசா மே உறுதியாக தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
13-டிச-201807:20:11 IST Report Abuse
சீனி நேற்று பிரிவினையை ஏற்ப்படுத்திய நாடு, இன்று பிரிவினையை சந்திக்கிறது. ஐரோப்பிய கூட்டணியில் இருந்து மற்ற சில நாடுகளும் விலக இருக்கிறது. உலகம் ஒற்றுமையாகும் போது இது துரதிஷ்டவசமானது. சீனா, இந்தியா உலக அரசியல்சார்பை விரைவில் நிர்ணயிக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X