சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மிதமான உடற்பயிற்சியின் நன்மைகள்

Added : டிச 13, 2018
Advertisement
மிதமான உடற்பயிற்சியின் நன்மைகள்

ஒரு முறை லேசான உடற்பயிற்சி செய்தால், அதன் பலன்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தினமும் தவறாமல் கடினமான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்தால் தான் பலன் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது.
ஆனால், அவ்வப்போது, கடினமில்லாத உடற்பயிற்சிகளை செய்தாலேகூட பலன் கிடைக்கும் என்பது மருத்துவர்களுக்கே வியப்பை தந்துள்ளது. உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் மெலானோகார்டின் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன.
இந்த ஹார்மோன்கள், உட்கொள்ளும் உணவை செரிப்பதற்கும், குளுகோசை நெறிப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
உடற்பயிற்சி செய்பவருக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த ஹார்மோனின் சுரப்பு நீடிப்பதால், உடலுக்கு நல்லவிதமான தாக்கம் ஏற்படும் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக மருத்துவர்கள், ஆய்வகத்தில் எலிகள் மீது நடத்திய சோதனைகளில் இது நிரூபிக்கப்பட்டது.
எலிகளுக்கும், மனிதர்களுக்கும் மெலானோகார்டினின் அமைப்பு ஒரே மாதிரி இருப்பதால், மனிதர்களுக்கும் இது பொருந்தும் என, ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X