சந்திரசேகர் வெற்றிக்கு ஜோதிடமும் காரணமாம்!

Updated : டிச 13, 2018 | Added : டிச 13, 2018 | கருத்துகள் (35)
Advertisement
தெலுங்கானா, முதல்வர், சந்திரசேகர ராவ், ஜோதிடம், தெய்வ பக்தி

ஐதராபாத்: தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் ஜோதிடர்களின் அறிவுரைப்படி தான் ஆட்சியை கலைத்துள்ளார். அவர்கள் குறித்து கொடுத்த நேரத்தில் தான் இரண்டாவது முறையாக பதவியும் ஏற்றுள்ளார்.


தெய்வ பக்தி மிக்கவர்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெய்வ பக்தி மிக்கவர். அடிக்கடி யாகங்கள் செய்வார். ஐதராபாத்தில் இருந்து 100 கி.மீ., தொலைவில் சித்திபெட் நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். 1980ம் ஆண்டு முதல், தெலுங்கானா தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்கு முன் இந்த கோவிலுக்கு சந்திரசேகர ராவ் செல்வது வழக்கம். அதே போல் தேர்தலில் போட்டியிடும் முன்பும் இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வருவார். இதுதவிர ஜோதிடம் மீது சந்திரசேகர ராவுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஜோதிடர்கள் குறித்து கொடுக்கும் நேரத்தில் தான் முக்கிய வேலைகளை மேற்கொள்வார்.


குருபுஷ்ய யோகம் உண்டு

தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு தான் சட்டசபை தேர்தல் நடக்க வேண்டும். ஆனால், சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை நடக்க வைத்து அபார வெற்றியும் பெற்றுள்ளார். சிருங்கேரி மடத்தை சேர்ந்த பூஜாரிகள் பானிஷஷாங் சர்மா மற்றும் கோபிகிருஷ்ணா சர்மா ஆகியோர் செப்., 6ம் தேதி தான் சட்டசபை கலைக்க வேண்டும் என தேதி குறித்து கொடுத்துள்ளனர். அன்றைய தினம் குருபுஷ்ய யோகம் உண்டு என்று அவர்கள் கூறியுள்ளனர். அதாவது வியாழக்கிழமை அன்று பூச நட்சத்திரம் வரும் நாள். அதுபடி தான், செப்., 6ம் தேதி சட்டசபையை கலைத்து சந்திரசேகர ராவ் அறிவிப்பு வெளியிட்டார். எனினும், தேர்தல் நடந்த டிச., 7 ம் தேதி அன்று அமாவாசை இருந்துள்ளது. அது, சந்திரசேகர ராவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றே ஜோதிடர்கள் கருதினர். எனினும், ஓட்டு எண்ணிக்கை நடந்த டிச., 11 தேதி, அவருக்கு உகந்த நாள் என்பதால் பாதகம் இல்லை என்றும் குறித்து கொடுத்துள்ளனர்.




ராஜயோக நேரம்

இதையடுத்து இன்று (டிச., 13) மதியம் 1.34 மணிக்கு சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நேரத்தை குறித்து கொடுத்தது புவனகிரி மாவட்டம், யதாத்ரி நகரில் உள்ள லட்சுமி நரசிம்ம கோவில் பூஜாரி தான். அந்த நேரம், ராஜ யோகம் கொண்டது என்று அந்த பூஜாரி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
14-டிச-201803:50:50 IST Report Abuse
 nicolethomson உண்மையில் இந்த செய்தியை விட, வாசகர்கள் கருத்தட்டுகள் செமயா இருக்கு, உண்மையில் சந்திரசேகர ராவை கலாய்ப்பவர்கள் அவரின் மூத்திரத்தை கொஞ்சம் குடியுங்க, ஏனென்றால் அவர் அவ்ளோ நல்ல விஷயத்தை தெலங்கானாவிற்கு செய்துள்ளார், அவரை போன்ற தில்லானா முதல்வர் தமிழ்நாட்டிற்கு கனவே,
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
13-டிச-201822:33:48 IST Report Abuse
rajan.  கர்ம பலன் சார்ந்த விதி என்பது எழுதப்பட சட்டம் சார்ந்த தீர்வு. இப்படி தான் இங்கே ஒருத்தி கோவில் பூஜை பரிகாரம் பச்சை சேலை என என்னவெல்லாமோ பண்ணி ஆட்டம் போட்டு கடைசில போயி எப்படியோ சேர்ந்து விட்டது. கூட இருந்து கூத்தடிச்ச ஒன்னு சிறை கம்பி எண்ணுகிறது. எனவே நேர்மையையும் உண்மையையும் சார்ந்த செயல்கள் ஓன்று தான் சிறப்பான கர்ம பலனை கொடுக்கும். மீதி எல்லாம் கடைசி காலத்திலே நொண்டி நொங்கு எடுத்துரும்.
Rate this:
Share this comment
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) அது அவர் நம்பிக்கை...மக்களின் நம்பிக்கையை காப்பாற்றினால் சரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X