தமிழ்நாடு

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காய்கறிகடைகள் உழவர்சந்தைக்கு மாற்றப்படுமா!

Added : டிச 13, 2018
Advertisement
 போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காய்கறிகடைகள் உழவர்சந்தைக்கு மாற்றப்படுமா!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு காய்கறி கடைகளை, உழவர் சந்தைக்கு மாற்றி, அந்த சந்தையை மேம்படுத்தலாம் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, 2000ம் ஆண்டு, அப்போதைய முதல்வர், கருணாநிதி, உழவர் சந்தையை திறந்து வைத்தார். இங்கு, அனைத்து வசதிகளுடன், 60 கடைகள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வழங்கப்பட்டன.விவசாயிகள் இலவசமாக விற்பனை செய்யவும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வியாபாரம் செய்யவும், மாத வாடகை, 1,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.துவக்கத்தில், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சந்தைக்கு, காய்கறி வாங்க வரும், பொதுமக்கள் எண்ணிக்கை குறைந்ததால், வியாபாரிகள் அங்கு செல்வதை நிறுத்தி விட்டனர்.
தற்போது, பெயர் அளவிற்கு, ஒரு சில கடைகள் மட்டுமே அங்கு செயல்படுகின்றன.அவர்களும், காலை நேரத்தில், ஒரு மணி நேரம், வியாபாரம் செய்து விட்டுச் செல்கின்றனர்; அதன் பின், சந்தை மூடி கிடக்கிறது.இந்நிலையில், பழைய, ஜி.எஸ்.டி., சாலை, மேட்டுத்தெரு சந்திப்பு பகுதியில், சாலையின் இரு புறமும், சாலையோர காய்கறி கடைகள் வைத்து, வியாபாரம் செய்கின்றனர்.சென்னை உட்பட பல்வேறு இடங்களிலிருந்து காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்களும், அந்த பகுதிக்கு வருகின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழை பெய்தால், சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
இதனால், காய்கறி வாங்கிச்செல்லும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். மழை நீர் கால்வாய் அருகிலேயே, கடைகள் உள்ளதால், துர்நாற்றம் மற்றும் கொசுக் கடியில், வியாபாரிகளுடன், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, சாலையோர காய்கறி கடைகளை, உழவர் சந்தை அல்லது அதன் அருகில் உள்ள, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.எனவே, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, சாலையோர காய்கறி கடைகளை, இடமாற்றம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X