தமிழ்நாடு

நகருக்குள் பயணிக்கும் வேகத்துக்கு பிரேக் போட்டாச்சு!...விபத்து குறைக்க வருகிறது அறிவிப்பு

Added : டிச 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 நகருக்குள் பயணிக்கும் வேகத்துக்கு பிரேக் போட்டாச்சு!...விபத்து குறைக்க வருகிறது அறிவிப்பு

கோவை:கோவை மாநகர பகுதிகளில் வாகனங்கள் பயணிக்க வேண்டிய அதிகபட்ச வேகம், 40 கி.மீ., ஆக குறைக்கப்பட்டுள்ளது; முதல் கட்டமாக ஆறு இடங்களில், 30 கி.மீ., வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல், வாகனங்களின் விதிமீறல் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில், மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 50 கி.மீ., வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட, 50 கி.மீ., வேகத்தை தாண்டும் வாகன ஓட்டிகளை, போக்குவரத்து போலீசார் வேக கட்டுப்பாடு கருவி மூலம் கண்டறிந்து, அபராதம் விதிக்கின்றனர். இருந்தும், 50 கி.மீ., வேகத்தை காட்டிலும், கூடுதல் வேகத்தில் மாநகர பகுதிகளில் வாகனங்கள் இயக்கப்படுவதால், விபத்துக்கள் தொடர்கின்றன.இந்நிலையில், மாநகர பகுதிகளில் வாகனங்களின் 50 கி.மீ., ஆக இருந்த, அதிகபட்ச வேகம், 40 கி.மீ., ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு விரைவில் அரசிதழில் வெளியாகும் என்றும், அதன்பின் குறிப்பிட்ட வேகத்தை காட்டிலும், கூடுதல் வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது:அதிக வேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை, 'ஸ்பீடு ஜூம்' கருவி மூலம் பிடித்து, 400 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இந்த வேகத்தை, 40 கி.மீ., ஆக குறைக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பரிந்துரை அரசிதழில் வெளியான பின், மாநகரில் அதிகபட்ச வாகன வேகம், 40 கி.மீ., தான் இருக்க வேண்டும். இதன்மூலம் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.ஆறு இடங்களில் 30 கி.மீ.,!காந்திபுரம் - கணபதி, நுாறடி ரோடு, கிராஸ்கட் ரோடு, பாரதியார் ரோடு, சுக்ரவார்பேட்டை-அவிநாசி மேம்பாலம், வைசியாள் வீதி-செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களின் அதிகபட்ச வேகம், 30 கி.மீ., என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில், 30 கி.மீ., வேகத்தை மீறும் வாகன ஓட்டிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் போலீசார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
15-டிச-201800:26:28 IST Report Abuse
Kundalakesi சும்மா ஜோக் பண்ணாதீங்க. அப்பறம் எதுக்கு 200 சிசி பைக் விற்பனை பண்ணவிடறீங்க? இன்னோவா போன்ற சொகுசு கார் முப்பது கிலோமீட்டர் ல போகணும்னா அது பர்ஸ்ட் கியர் மேல போட கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X