இவை ஊழலா, அன்பளிப்பா!

Added : டிச 14, 2018
Advertisement

தமிழகத்தில் அதிக இடங்களில், வருமான வரித்துறை அல்லது ஊழல் எதிர்ப்பு சோதனைகள் அதிகம் காணப்படுகின்றன. பொதுவாக, தனியார், 'ஆம்னி பஸ்'களில், 'கரன்சி' நோட்டு அல்லது தங்கம் பிடிபடுவது வேறு ரகம்.

வாகனங்களுக்கு, 'லைசென்ஸ்' பெறும், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் ஊழல் என்பது, காலம் காலமாக நீடிப்பது. அங்கும், சோதனைகள் நடந்திருக்கின்றன.தமிழகம் அதற்காக, ஊழல் கேந்திரம் என்று சுட்டுவதை விட, அது பல துறைகளிலும் பரவிப் படர்ந்து இருப்பதை உணரலாம். சில நேரங்களில், வி.ஏ.ஓ., எனப்படும், கிராம அதிகாரிகள் கூட, கையூட்டு பெறுவதும் நடக்கிறது.

முக்கியமாக, லஞ்ச ஒழிப்புத் துறை, அரசு மருத்துவமனைகளில் நடத்திய சோதனைகளில் கிடைத்த தகவல்கள், அனைவரையும் அதிர வைக்கும். தமிழகத்தில், அரசு மருத்துவமனைகள் என்பதில், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளும் அடக்கம். இம்மருத்துவமனைகளில், அதிகளவில் மகப்பேறு மற்றும் சாதாரண காய்ச்சல் அல்லது முதலுதவிக்கான மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும்.

அதன் காரணமாக, தமிழகத்தில் பேறு காலத்தில், குழந்தைகள் சாவு அல்லது பிரசவ நேரத்தில் தாய் மரணம் ஆகியவை, கணிசமாக குறைந்திருக்கின்றன. தவிரவும், குடும்ப நலம் என்ற வகையில், அடுத்தடுத்து குழந்தை பிறக்காமல், அதைக் கட்டுப்பாடாக்கும் நடைமுறைகளும் சிறந்திருக்கின்றன.

பல நேரங்களில் இறந்தவர் ஈமக்கிரியை நடத்த, முறையான சான்றிதழ் பல தடவைகளில், 'இதயம் செயலிழந்தது' என்ற பொதுவான வார்த்தையுடன் கூடிய சான்றிதழ் தரப்படுகிறதே தவிர, குறிப்பிட்ட அவயவம் செயலிழப்பு காரணமாக ஏற்பட்டதை விளக்கிய சான்றிதழ் தருவதில்லை.ஏனென்றால், சிக்கலைச் சந்திக்கும் நோயாளிகளின் உறவினர் அல்லது செலவு செய்பவர், ஒரு நேரத்தில், டாக்டர் கைகழுவியது என்ற முடிவு வந்ததும், எதையும் ஏற்கத் துணிவர்.

தனியார் பெரிய மருத்துவமனைகளில், நோயாளியின் குடும்பத்தினர் பணபலத்தை பொறுத்து, செலவினம் அமையும். இதனால், தவறில்லை. ஆனால், பிறந்த குழந்தைகளை, பெற்றோரிடம் காட்டுவதற்கு, அரசு மருத்துவமனைகளில், 200 முதல், 1,000 ரூபாய் வரை லஞ்சம், சில மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில், சி.டி., ஸ்கேன் போன்றவற்றிற்கு, அபரிமிதமாக பணம் பெறும் ஊழியர்கள் இருப்பது, நீண்ட நாளாக எல்லாரும் அறிந்த உண்மை.

அதைவிட, சில அறுவை சிகிச்சைகளுக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் அங்கே, 'ஸ்டாக்' இல்லை என்றால், வெளிச்சந்தையில் பயனாளிகள் பெறும் போது, அங்கே இயல்பாக லஞ்சம் தலைதுாக்கும்.இதில், சென்னையில் உள்ள, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல், திண்டுக்கல், சேலம், திண்டிவனம் வரை நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில், நெடு நாளைய, 'லஞ்ச நோய்க்கூறு' அம்பலமாகி உள்ளது.

அரசு மருத்துவமனைகளில், வார்டு பாய், நர்சுகள் உட்பட, கீழ்மட்ட ஊழியர்கள் இதில் சம்பந்தப் பட்டதும், கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும், சவ அறைகளில் வைக்கப்படும் பிரேதங்களை கண்டறிய அல்லது உறவினர் பார்க்க, லஞ்சம் என்பது முக்கியமாக இருக்கும். அப்பிணவறை களில் அதிக அளவு, 'ஏசி' வசதி அல்லது வரிசைப்படுத்தி வைக்க பெட்டிகள் என்ற சிறப்பான நடைமுறை முற்றிலும் கிடையாது. ஓரளவு வசதி படைத்தவர்கள் தொடர்புடைய பிணம் என்றால், அவை எலி அல்லது பெருச்சாளி கடி இல்லாமல் தப்பும்.

சில பிணங்கள், வாரக்கணக்கில் காத்திருக்கும் அவலம் நீக்கப்பட, உரிய சட்டமுறைகள் இன்னமும் வரவில்லை.இவை தொடர்கதை என்றாலும், அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களும், முறைப்படி அதிக சுகாதாரக் கோட்பாடுடன், வசதியாக இருக்கும் சூழ்நிலை இருப்பதில்லை. அதேபோல், கீழ்நிலை ஊழியர்களும், அக்குறைபாடுகளை சந்திக்கும் நிலை, பல அரசு மருத்துவமனைகளில் இருப்பவை.

அதிக மக்கள் வரும் பகுதி, மருத்துவம், அல்லது மருந்துகள் அல்லது நோய்க்கூறு ஆகியவை பற்றி அறியாத சூழ்நிலையுடன் இருப்பவர்கள், கடைசியில், தாங்கள் தரும் லஞ்சப்பணம், தங்களைக் காக்கும் சாதனம் என்ற பழக்கத்திற்கு வந்துள்ளனர்.புறநோயாளிகள் அதிகமாகும் போது, அதற்கேற்ப சில மருந்துகள், 'ஸ்டாக்' இருக்காது. டாக்டர்கள், செவிலியர், நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்படும் நிர்வாக கட்டமைப்பு, அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் வரவில்லை.

இதற்கு ஒரு நிர்வாக நடைமுறை, திறமைக்கு முன்னுரிமை, சுகாதார நடைமுறைகளை மேம்படுத்த, அதிக சுத்தமான தண்ணீர் வசதி ஆகியவற்றில் எது குறைந்தாலும், அது ஊழல் என்பது, 'அன்பளிப்பாக' மாறும் அபாயம் வரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X