ராமரை போல் சீதைக்கும் சிலை : காங்., கோரிக்கை| Dinamalar

ராமரை போல் சீதைக்கும் சிலை : காங்., கோரிக்கை

Added : டிச 14, 2018 | கருத்துகள் (32)
Advertisement
காங்கிரஸ், ராமர் சிலை, அயோத்தி, சீதை சிலை, உ.பி., முதல்வர், கடிதம்

லக்னோ : ராமரை போல் சீதைக்கும் சிலை அமைக்க வேண்டும் என காங்., முன்னாள் எம்.பி., கரன் சிங், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்தியில் ஆளும் பா.ஜ., அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதிலும், ராமருக்கு சலை வைப்பதிலுமே கவனம் செலுத்தி வருவதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய இடம்பிடித்தன. சமீபத்தில், ராமருக்கு 221 மீட்டர் உயர சிலை அமைக்க போவதாக உ.பி., முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் தற்போது, காங்., கட்சியை சேர்ந்த கரன் சிங், ராமரை போல் சீதையையும் சிலை வைத்து கவுரவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக உ.பி., முதல்வருக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், அயோத்தியில் சீதைக்கும் கவுரவம் அளிக்க வேண்டும். சீதையை குறைத்து மதிப்பிடுவது வேதனை அளிக்கிறது. அதுனால் அயோத்தியில் ராமரை போன்று சீதைக்கும் சிலை அமைக்க வேண்டும். ராமருக்கு அமைக்கப் போவதாக சிலையின் உயரத்தை குறைத்துக் கொண்டு, அந்த தொகையை கொண்டு ராமருக்கு அருகில் சீதைக்கும் சிலை அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ராமரை திருமணம் செய்த பிறகு சீதை பல துன்பங்களை அனுபவித்துள்ளார். 14 ஆண்டுகள் ராமனை பிரிந்து வசித்ததுடன், ராவணன் கடத்தி சென்ற போது கைதியாகவும் இருந்துள்ளார். அக்னி பிரவேஷத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்த போதும் பல துன்பங்களை அனுபவித்தவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
niec99 - chennai,இந்தியா
14-டிச-201817:38:41 IST Report Abuse
niec99 ஆளும் பா.ஜ., அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதிலும், ராமருக்கு சலை வைப்பதிலுமே கவனம் செலுத்தி வருவதாக (ராமருக்கு சலை வைப்பதிலுமே என்று இருப்பது சிலை என்று இருக்கவேண்டும் ) மற்றம் வருமா
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-டிச-201816:54:33 IST Report Abuse
ஜெயந்தன் நியாமாக பார்த்தல் வால்மீகி முனிவருக்கு தான் சிலை வைக்க வேண்டும்..அவர் ராமாயணத்தை எழுதா விட்டால் எவருக்கும் ராமனையும் தெரியாது..சீதையையும் தெரியாது ..
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
14-டிச-201816:41:02 IST Report Abuse
oce பரதன் சத்ருக்கன் கைகேயி மண்டோதரி சூர்ப்பனகை ஜடாயு ஆகியவர்கள்களுக்கும் சிலைகள் வைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X