பொது செய்தி

இந்தியா

வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : டிச 14, 2018 | Added : டிச 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
இந்திய வானிலை மையம், புயல், கனமழை, காற்ழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை: வரும் 15 மற்றும் 116 தேதிகளில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இது குறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு தென் கிழக்கே 930 கி.மீ., தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து 1100 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது 13 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. 15ம் தேதி பிற்பகலில் ஆந்திர மாநிலம் அங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கக்கூடும். இதனால், வட கடலோர மாவட்டங்களில் 16, 17 தேதிகளில் ஒரு சில இடங்களிலும், ஒரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 15, 16 தேதிகளில், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடலில் கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.புயலாக மாறும்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும், பிறகு தீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை மையம் இன்று (டிச.,14) வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு 960 கி.மீ., தூரத்தில் உள்ளது. வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும், பிறகு தீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளது. டிசம்பர் 17 ம் தேதி ஆந்திராவில் ஓங்கோல் - காக்கிநாடா இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக டிச.,16, 17 ஆகிய தேதிகளில் ஆந்திராவின் ஒரு சில இடங்களில் சிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச.,16 ம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ., வரை வீசக்கூடும். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAM -  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-201823:05:54 IST Report Abuse
RAM Chennaikku mazhai varuma varatha? athai yaarum thelivaga sollavillai. vada maavattangali gana mazhai yendraal chennaiyuma ? weather reporters shall inform specifically on Chennai
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-டிச-201815:46:05 IST Report Abuse
தேச நேசன் அடடா புயலே வராதா இதிலாவது இன்னும் கொஞ்சம் ஆட்டயப்போடலாம்னு இருந்தார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கஜாவிலே தென்மாவட்ட கும்பிடு குருசாமிகள் சம்பாதிச்சாங்க . வடமாவட்ட ஆட்கள்தான் இப்போ வசமா ஏமாந்துட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
Rajasekar K D - Kudanthai,இந்தியா
14-டிச-201815:22:35 IST Report Abuse
Rajasekar K D ஐய்யோ சண்டே சரக்கு போடலாம்னு பார்த்தா, புயல் வேற எங்கோ போகுதே நல்ல மழை பொழிந்தால் சரி (ஜாலிக்காக)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X