ரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் கோர்ட்| Dinamalar

ரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் கோர்ட்

Updated : டிச 14, 2018 | Added : டிச 14, 2018 | கருத்துகள் (222)
Advertisement
ரபேல் ஒப்பந்தம், சுப்ரீம் கோர்ட், சிபிஐ விசாரணை, தீர்ப்பு

புதுடில்லி :'ரபேல்' ரக போர் விமானம் வாங்குவது தொடர்பாக, நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரும் வழக்குகளில், முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. போர் விமானங்கள் வாங்குவதில் அரசின் கொள்கை முடிவுகள் சரியானதே என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த, 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கும், ரபேல் ரக போர் விமானங்கள் வாங்குவதற்கு, 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, வழக்கறிஞர் வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், பா.ஜ., அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தனித் தனியாக வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அதை விசாரித்த அமர்வு, 'இந்த வழக்கில், 14ல் தீர்ப்பு அளிக்கப்படும்' என, தெரிவித்தது. அதன்படி, இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் அரசின் கொள்கை முடிவுகள் சரியானது தான். இந்த ஒப்பந்தத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏதும் இல்லை. முகைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் வாங்க முடிவெடுத்தது ஏன் என புரிந்து கொள்ள முடியவில்லை. டசால்ட் நிறுவனம் இந்தியாவில் துணை நிறுவனம் தேர்வு செய்ததில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை.
வர்த்தக ரீதியாக சில நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை. 126 போர் விமானங்கள் வாங்கியே தீர வேண்டும் என மத்திய அரசை கோர்ட் கட்டாயப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் ரபேல் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடவும் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 5 பொது நல மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (222)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghul Smart - mos,ரஷ்யா
14-டிச-201821:09:44 IST Report Abuse
Raghul Smart சுடலை சொன்ன அடி இதுதானா ?
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
14-டிச-201819:55:21 IST Report Abuse
வல்வில் ஓரி புருடாகாந்தி வாயில மண்ணு.. இதெல்லாம் இளம் வாக்காளர்கள் உணரவேண்டும்...புருடா காந்தி கூட்டாளி சுடலைக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
14-டிச-201819:55:03 IST Report Abuse
Sukumar Talpady இந்த தீர்ப்பை காங்கிரஸ் ஒத்து கொள்ளாது . அவர்களுக்கு வேண்டிய மாதிரி தீர்ப்பை கொடுத்திருந்தால் இந்நேரம் மோடி ராஜினாமா கொடுத்தே தீர வேண்டும் என்று பெரிய ரகளை செய்திருப்பார்கள் . மக்களவையில் இன்று இவர்கள் செய்த ரகளை ஒரு சாட்சி . எதிலாவது திரு மோடியை சிக்க வைக்க வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள் . ஐயோ பாவம் தோல்வி தான் கிடைத்திருக்கிறது . பெரிய ஏமாற்றம் . ஆனால் அதை மறைக்க முயல்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X