அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,வில் இணைந்தார் செந்தில் பாலாஜி

Updated : டிச 14, 2018 | Added : டிச 14, 2018 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை : தினகரன் கட்சியில் அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று(டிச.,14) சென்னை அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக.,வில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி, தினகரன் கட்சியில் இணைந்தார். பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது ஆதரவாளர்கள் பலருடன் சென்று திமுக.,வில்
DMK, Senthil Balaji,  MK Stalin, திமுக, செந்தில் பாலாஜி, தினகரன், ஸ்டாலின்,  TTV Dinakaran,Stalin,

சென்னை : தினகரன் கட்சியில் அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று(டிச.,14) சென்னை அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக.,வில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி, தினகரன் கட்சியில் இணைந்தார். பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது ஆதரவாளர்கள் பலருடன் சென்று திமுக.,வில் இணைந்துள்ளார்.



பிறகு செந்தில்பாலாஜி கூறியதாவது:தொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராகவும் இருக்க முடியும். திமுக தலைவர் ஸடாலின் சிறந்த தலைவராக நான் பார்க்கிறேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு இயக்கத்தில் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன். தற்போது ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டேன். கரூர் மாவட்ட மக்கள், உணர்வு எண்ணங்களுக்கு ஏற்ப என்னை திமுகவில் உறுப்பினராக இணைத்து கொண்டேன். தமிழகத்தில் இபிஎஸ் ஓபிஎஸ், மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுத்து செல்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-டிச-201820:50:40 IST Report Abuse
kulandhaiKannan சேலம் செல்வகணபதி, ஈரோடு முத்துசாமி, கரூர் சின்னசாமி, வடசென்னை சேகர்பாபு வரிசையில் இன்று செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்திருக்கிறார். திமுகவால் இவருக்கோ அல்லது இவரால் திமுகவிற்கோ எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை
Rate this:
Cancel
srk srinivasan - Flushing,யூ.எஸ்.ஏ
14-டிச-201819:53:16 IST Report Abuse
srk srinivasan மணல் கொள்ளையில் சம்பத்தப்பட்ட அனைவரும் ஓரணியில் திரள்வோம் .
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-டிச-201819:34:20 IST Report Abuse
Pugazh V பாஜகவிடம் சேர்ந்திருந்தால் புனித நீர் தெளித்து காவடி தூக்கியிருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X