முதல் ரயில்வே பல்கலை: நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Added : டிச 15, 2018 | கருத்துகள் (7) | |
Advertisement
வதோதரா, குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள,நாட்டின் முதல் ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்தை, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், மாநில முதல்வர், விஜய் ரூபானி ஆகியோர், நாட்டுக்கு இன்றுஅர்ப்பணிக்க உள்ளனர்.குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சர்வதேச அளவில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தான், ரயில்வே மற்றும் போக்குவரத்து
Piyush Goyal, Vijay Rupani, Railway University, ரயில்வே பல்கலை, ரயில்வே, பியுஷ் கோயல், விஜய் ரூபானி,   ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம், பாரதிய ஜனதா ,  பா.ஜ.,
railway university vadodara, Railway,  Railway Minister Piyush Goyal, Railway and Transport University, Bharatiya Janata, BJP, Rail University, PM Modi, Indian Railways,

வதோதரா, குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள,நாட்டின் முதல் ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்தை, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், மாநில முதல்வர், விஜய் ரூபானி ஆகியோர், நாட்டுக்கு இன்றுஅர்ப்பணிக்க உள்ளனர்.குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சர்வதேச அளவில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தான், ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் அமைந்துள்ளன.நம் நாட்டிலும், ரயில்வே மற்றும் போக்கு வரத்து பல்கலையை நிறுவ, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்தது.இதன்படி, குஜராத் மாநிலத்தின், வதோதரா மாவட்டத்தில், நாட்டின் முதல், தேசிய ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த பல்கலையில், 20 மாநிலங்களைச் சேர்ந்த, 17 மாணவியர் உட்பட, 103 மாணவர்கள், இளங்கலை பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர்.மேலும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், முதுகலை பட்டப்படிப்புகளை துவங்கவும், பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.இந்நிலையில், இன்று நடக்கும் நிகழ்ச்சியில், வதோதராவில் கட்டப்பட்டுள்ள, தேசிய ரயில்வே மற்றும் போக்கு வரத்து பல்கலை, முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட உள்ளது.இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், குஜராத் மாநில முதல்வர், விஜய் ரூபானி ஆகியோர் பங்கேற்கின் றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,இந்தியா
15-டிச-201811:11:18 IST Report Abuse
 N.Purushothaman உலகிலேயே அதிக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டது இந்திய ரயில்வே என்பது காங்கிரஸ் சொம்பைகளுக்கும் அவங்களுக்கு சொம்படிக்கிற சொம்பாளர்களுக்கும் தெரியும் ...50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த கட்சிக்கு இப்படி ஒரு பல்கலைக்கழகம் அமைக்கணும்ன்னு தோணவேயில்லை .... கடந்த 4 ஆண்டுகளில் இந்த துறையை எந்த அளவிற்கு முன்னேற்றி உள்ளது என்பது எத்தனை பேத்துக்கு தெரியும் ? கிட்டத்தட்ட 12 ,000 கோடி ரூபாய் செலவில் பல மோசமான தண்டவாளங்கள் மாற்றப்பட்டு , பயணிகள் பாதுகாப்பை அதிகரித்தும் , விபத்து மற்றும் அவற்றால் உயிரிழப்பை பெருமளவு குறைத்தும் பல முன்னேற்றங்களை செய்துள்ளது இந்த அரசு ...அதோடு பல புது ரயில்கள் தொடங்கப்பட்டும், முக்கிய மார்க்கங்களில் ஆளில்லாத கிராஸ்ஸிங் முற்றிலும் ஒழிக்கப்பட்டும் உள்ளது ..சென்னை ICF யில் தயாரான உலகத்தரத்திற்கு சவால்விடும் வகையில் Train 18 அமைக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் வெற்றி கண்டு அடுத்த மாதம் அர்பணிக்கப்படுகிறது ...இந்த ட்ரெயின் தற்போது அதிவேக ட்ரைனான சதாப்தியை விட 20 முதல் 30 % வேகத்தில் இயக்க முடியும் ...இது போன்ற பல சாதனைகளை ரயில்வே செய்து வருகிறது ...போன ஆட்சியில ஒரு வெங்காயமும் செய்யாம வெறும் வாய்ஜாலம் காட்டிய தீவின திருடன் லாலுவை ஆகா ஓகோன்னு புகழ்ந்த கூட்டம் தானே இந்த கயவர்கள் கூட்டம் ...அதை பயன்படுத்தி அந்த ஆளு வழக்கம் போல IRCTC யில் தன குடும்பத்திற்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து அதில முறைகேடு நடந்து இப்போ அது தொடர்பா வழக்கும் நடக்குது ...இப்படி தான் இருக்கும் இவனுங்களோட பாரம்பரியம் ...ஆனால் வளர்ச்சியை கொடுக்கிற மோடியை ஒயிகன்னு கூவுவானுங்க கூறு கெட்டவனுங்க ...அதுக்கு இட ஒதுக்கீட்டு மூலமா அரைகுறையா படிச்ச டூமிழியன்ஸ் சேர்ந்து கோஷம் போடுவாய்ங்க ...
Rate this:
Cancel
Advaiti - Chennai,இந்தியா
15-டிச-201808:24:07 IST Report Abuse
Advaiti யூனியன்கள் இருந்தும் கடந்த சில வருடங்களாக தண்டவாளங்கள் பராமரிப்பு, மாற்றப்படுவது, 3 -5 ரூபாய்க்கு குடிநீர், தொலைதூரத்திற்கு முழுதாக முன்பதிவில்லாத ரயில்கள், புது பாலங்கள், உலக சாதனைகளாக உயரத்தில் பாலம், கன்யாகுமரியிலிருந்து அருணாசலப்ரதேசத்திற்கு ரயில்கள், சோலார் ரயிர்கள், இஞ்சின் மாற்றங்கள், நவீன பெட்டிகள், புதுப்பிக்கப்பட்ட கழிப்பிடங்கள்....வரிசையில் இப்போது இந்த பல்கலைக்கழகம்.... வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-டிச-201807:50:07 IST Report Abuse
ஆரூர் ரங் நம்ம ஊர்ல இதுக்கெல்லாம் நிலம் கொடுக்கமாட்டாங்க தரிசு .வெவசாயத்தைக் காப்போம்னு கொடிபிடிச்சு போராடி சன் நியூஸ்ல முகம் வருதான்னு பாத்து பார்த்து சந்தோஷப்படுவாங்க .பொழுதுபோனா சரக்கும் கெடைக்குமே
Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
15-டிச-201811:41:33 IST Report Abuse
Jaya Ramமுதல்ல எங்கள் வருமானத்தினை எங்களுக்கு தாருங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நாங்கள் இந்நாட்டில் இணைந்து இருப்பதற்கு வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகையினை உங்களுக்கு கட்டணமாக செலுத்துகிறோம் பூட்டான் போல போதும் இந்நாட்டிற்காக நாங்கள் எண்களின் மக்களின் உயிர்களையும் , பொருளாதாரத்தினையும் கொடுத்தது போதும் நாங்கள் இதனை எங்கள் தேசம் என்று நம்பினோம் ஆனால் நீங்கள் எங்களை மோசம் செய்தது pothum, எங்கள் கலாச்சாரத்தினை இழந்தோம் , மொழியுரிமையினை இழந்தோம் , கல்வியுரிமையினை இழந்தோம் , நிலஉரிமையினை இழந்தோம் இன்னும் இழப்பதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை எண்களின் பெண்டு பிள்ளைகள் மட்டுமே பாக்கி இதிலே நீங்கள் எங்களுக்கு நல்லது செய்வதாக உலக நாடுகளை நம்ப வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X