பொது செய்தி

தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Updated : டிச 15, 2018 | Added : டிச 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
TN Weather, Meteorological, Balachandran, Heavy Rain,புயல், சென்னை வானிலை,தமிழக வானிலை,வானிலை ஆய்வு மையம் , பாலச்சந்திரன், கனமழை, வானிலை, பருவமழை , ஆந்திரா, andhra, 
Storm, Chennai Weather, Tamilnadu Weather, Weather Center,  Weather, Monsoon,

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு 'பெய்ட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், 17 ம் தேதி ஆந்திராவில் காக்கிநாடாவுக்கும் - மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்க உள்ளது.
முன்னதாக, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில்:

தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று சென்னைக்கு தென்கிழக்கே 690 கி. மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறும். இந்த புயல் ஆந்திர மாநிலம், ஓங்கோல் காக்கி நாடா இடையே டிசம்பர் 17 ல் பிற்பகலில் கரையை கடக்கும்.

இதன் காரணமாக வரும் 15, 16 தேதிகளில் வட தமிழக கடலோரா பகுதிகுகளில் மிதமான மற்றும் கன மழை பெய்யக்கூடும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை இன்று லேசான மழையும், நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் தரைக்காற்று வீசும் . வரும் 15,16, 17 தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
16-டிச-201807:45:28 IST Report Abuse
Ram No rain for Chennai due to Peyti. This coming year would be a everyday nightmare for chennaites
Rate this:
Share this comment
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
15-டிச-201822:40:47 IST Report Abuse
uthappa சந்திரபாபுவுக்கு கொண்டாட்டம். Rs. 35000 /- கோடி நிவாரணம் கேட்பார், மோடி கொடுக்காமல் ஏமாற்றியதாக அரசியல் செய்வார்.நல்ல ஜாக்பாட்.medias will have good one month to celeberate.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X