பொது செய்தி

இந்தியா

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Updated : டிச 15, 2018 | Added : டிச 15, 2018 | கருத்துகள் (137)
Advertisement
Tuticorin Sterlite Plant, National Green Tribunal, Tarun Agarwal, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தேசிய பசுமை தீர்ப்பாயம், வேதாந்தா குழுமம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ,  நீதிபதி தருண் அகர்வால், தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட், 
vedanta group, Thoothukudi Gunfire, Justice Tarun Agarwal, Tamilnadu Pollution control Board, Sterlite Plant, Thoothukudi Sterlite,

புதுடில்லி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் நிர்வாகம் கவலைப்படவில்லை என்பதால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டதாகவும், முழுமையான மதிப்பீட்டுக்கு பிறகே, ஆலையை மூட உத்தரவு பிறப்பித்ததாகவும், தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

ஆலையை ஆய்வு செய்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, ஆலையை திறக்கலாம். ஆலையை மூடியது சரியல்ல எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் சமீபத்தில் அறிக்கை அளித்திருந்தது. இதனையடுத்து தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று, விசாரணை முடிவடைந்ததை அடுத்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில், 3 வாரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை வகுக்கலாம். துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை மீண்டும் அளிக்க வேண்டும். ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேல்முறையீடு

சேலத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் எனக்கூறினார்.


தலைகுனிவு

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான ஆதாரங்களை அரசு சேரிக்க வேண்டும். இனியாவது, தமிழக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தேசிய தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு எனக்கூறியுள்ளார்.


எச்சரிக்கை

தூத்துக்குடி எஸ்பி கூறியதாவது: ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஜனநாயக முறைப்படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும். போலீசாருக்கு, மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் குறித்து புகார் அளிக்கலாம். வன்முறையை தூண்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் வேண்டுகோள்

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் பொது மக்கள் எந்த வகையிலான போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம். சமூக வலைதளங்கள் மூலமும் போராட அழைக்க வேண்டாம். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்பாக போலீசாருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (137)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-டிச-201802:41:38 IST Report Abuse
தமிழ்வேல் எதிர்பார்த்தது தான்.
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
15-டிச-201822:43:35 IST Report Abuse
R. Vidya Sagar தவறாக துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு அதை சரி கட்ட இந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்கும், நொடிக்கு நொடி அம்மாவின் ஆட்சி என்று சொல்லும் அதிமுக வீரர்களுக்கு இந்த ஆலையின் அடிக்கல் ஜெயலலிதா நாட்டினார் என்று ஞாபகம் இருக்கிறதா?
Rate this:
Share this comment
Cancel
GOPALASAMY - bengaluru,இந்தியா
15-டிச-201822:28:51 IST Report Abuse
GOPALASAMY இந்தியாவில் உள்ள எல்லா காப்பர் அலைகளையும் மூட வேண்டும் . தமிழர்களாகிய நாம் இனிமேல் காப்பரை ( செம்பை ) எந்த ரூபத்திலும் உபயோகிக்க மாட்டோம் என்று சபதம் எடுக்க வேண்டும் . முதலில் மின்சாரத்தை உபயோகிக்க கூடாது .
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
16-டிச-201806:30:46 IST Report Abuse
Pannadai Pandianஏண்டா உனக்கு காப்பர் மேல இம்புட்டு கோவம் ???...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X