தமிழகத்தில் பிறந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.,) அழகி பட்டங்கள் வென்றவர், சாட்சாத்... பாக்தாத் பேரழகி என்றே சொல்லலாம். அந்த இளமை துள்ளல் சாஹித்யா ராஜசேகர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்கு தந்த பேட்டி...
* ஜாதகம்பிறந்தது சென்னை வளசரவாக்கம். எனது ஒரு வயதிலேயே துபாய் சென்று 'செட்டில்' ஆகிவிட்டோம். அப்பா ராஜசேகர், சொந்தமாக தொழில் செய்கிறார். அம்மா அனுராதா, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.
* படிப்புபயங்கர கெட்டிக்காரி. துபாயில் பள்ளிப்படிப்பு. பல்கலையில் ரோபோ மற்றும் மின்னணு இன்ஜினீயரிங் படித்தேன். பின் துபாய் புளூ வாட்டர் ஐலேண்டில் தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து கைநிறைய சம்பளம் வாங்கினேன்.
* இன்ஜினீயருக்கு மாடலிங் எப்படிபள்ளி, கல்லுாரி காலங்களிலேயே நடிப்பு, நடனத்திலும் ஜொலித்தேன். கல்லுாரி இறுதி ஆண்டில் நடந்த 'அழகி' போட்டியில் பங்கேற்றேன். அதிக வாக்குகளுடன் 'மிஸ் மணிப்பால்' பட்டம் வென்றேன். மாடலிங் ஆசை துளிர்த்தது. துபாய் மற்றும் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றுகிறேன். தற்போது வேலையை உதறிவிட்டு முழுநேர மாடலாகி விட்டேன். இது தவிர 'பேஷன் ேஷா'க்களில் பங்கேற்கிறேன்.
* மறக்க முடியாத தருணம்அக்.26ல் இந்தியன் சமூக மற்றும் பாரம்பரிய மையம் சார்பில் அமீரகத்தில் நடந்த அழகி போட்டியில் பங்கேற்று, 'மிஸ் குப்சூரத்' பட்டம் பெற்றது மறக்க முடியாத தருணம். 'மிஸ் சவுத் இந்தியா' போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதும் நினைவலையில் நீந்துகிறது.
* தமிழ் சினிமாதமிழ் திரையுலகம் ஆச்சர்யங்கள் நிறைந்தது. புதுசு புதுசா நடிகர், நடிகைகள் கலக்கி வருகிறார்கள். கோலிவுட்டில் எப்படியும் தடம் பதித்தே ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன். முறையாக நடனம் கற்றதால் பரதம், வெஸ்டர்ன் டான்சில் வெளுத்துக்கட்டுவேன். பாலிவுட் நடிகர், நடிகையருடன் அமீரகத்து நிகழ்ச்சிகளில் பலமுறை நடனமாடி இருக்கிறேன்.
* பாலியல் சீண்டல்...ம்ம்ம்... திரைத்துறையில் பாலியல் சீண்டல் அதிகமென கேள்விப்பட்டுள்ளேன். மனிதர்களை அடையாளம் கண்டு பழகினால் எந்த துறையிலும் பாலியல் சீண்டலில் சிக்காமல் தப்பலாம். என்மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் பெற்றோர் வழிநடத்துவதால் எனக்கு எந்த கவலையும் இல்லை.
இவரை தொடர்பு கொள்ள: sahitya92@yahoo.com