அரசியல் போராட்டத்தில் இணைந்து செயல்படுவோம்: சோனியா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் போராட்டத்தில் இணைந்து செயல்படுவோம்: சோனியா

Updated : டிச 16, 2018 | Added : டிச 16, 2018 | கருத்துகள் (63)
Advertisement
Sonia Gandhi, Rahul Gandhi, Stalin, கருணாநிதி, காங்கிரஸ், தி.மு.க, ராகுல், ராகுல் காந்தி,  கருணாநிதி சிலை திறப்பு , சோனியா, ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, சோனியா காந்தி, Congress, D.M.K, Rahul, karunanidhi,  Karunanidhi statue, Sonia, Chandrababu Naidu,

சென்னை: தற்போதைய அரசியல் போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் இணைந்து செயல்படவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசினார்.
நவீன இந்தியாவின் ஜாம்பவான் கருணாநிதி சிலையை திறந்து வைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் செல்வாக்கால் தோல்வி காணாதவர் கருணாநிதி. உடன்பிறப்புகளுக்கு 7 ஆயிரம் கடிதங்கள், 75 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பெருமைக்குரியவர். தமிழுக்கு செம்மொழி தந்தது தான் கருணாநிதிக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.காங்கிரஸ் கட்சிக்கு தந்த ஆதரவு மற்றும் ஆலோசனைகளை மறக்க மாட்டோம். இவ்வாறு சோனியா பேசினார். பேச்சின் முடிவில் சோனியா தமிழில் நன்றி, வணக்கம் என கூறினார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:



தமிழக மக்களின் குரலாக செயல்பட்டவர் கருணாநிதி. பலமுறை முதல்வராக இருந்த கருணாநிதி ஆணவமின்றி எளிமையாக இருந்தது என்னை பெரிதும் ஈர்த்தது. தமிழக மக்கள் மொழி, பண்பாடு, கலாச்சாரம் இவற்றை கருணாநிதி மூலம் பார்க்கிறேன். மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசாக மத்திய அரசு உள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.
கருணாநிதி சிலை திறப்பு விழா: தலைவர்கள் பேச்சு


சந்திரபாபு நாயுடு:



தென் பாரதமே பெருமை கொள்ளும் நேரமிது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழில் பேசினார். கருணாநிதியின் அரசியல் அனுபவம் இளைய தலைமுறைக்கு வழிகாட்டி. வலிமையான மாநிலமே வலிமையான நாட்டை உருவாக்கும் என்றார் கருணாநிதி.பணமதிப்பு நீக்கம் பொதுமக்களுக்கு பலனை தரவில்லை. வங்கித்துறையில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு சந்திரபாபு பேசினார்.


பினராயி விஜயன்


தமிழுக்காக வாழ்ந்தவர், அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர், சமூக வளர்ச்சியுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியே முக்கியம் என கருதியவர் கருணாநிதி இவ்வாறு கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.


நாராயணசாமி


ராகுல்,ஸ்டாலினால் மாற்றம் வரும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-டிச-201814:18:11 IST Report Abuse
Nallavan Nallavan 5 G யை உட்டுறாதீங்க சோனியா ஜீ .... திமுக உங்களோட இணைஞ்சு செயல்படும் .....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-டிச-201814:16:12 IST Report Abuse
Nallavan Nallavan தலீவரு எந்த விசயத்துல வழி காட்டுனாரு ..... தெரிஞ்சாச் சொல்லுங்கப்பா .... ஒரு லிஸ்ட்டே போட்டாலும் சரிதேன் ....
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
17-டிச-201808:49:53 IST Report Abuse
karutthu ஆமாம் ஏன் சீமான் , ஜீ கே வாசன் போன்றவர்களைக்காணும் .அவர்களை இவர்கள் கூப்பிடவில்லையா ? வைகோ வும் திருமாவும் ஒருவரை ஒருவர் இந்த கூட்டத்தில் சந்திக்க வில்லையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X