என்னை பிடிக்க மத்திய அரசு ஆர்வம்: விஜய் மல்லையா

Added : டிச 17, 2018 | கருத்துகள் (35)
Advertisement
Vijay Mallya, Public sector banks, London court,மல்லையா, விஜய் மல்லையா, மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள், கடன் மோசடி , பண மோசடி , வங்கி மோசடி,  லண்டன் நீதிமன்றம், 
Central government,  credit fraud,  bank fraud,

லண்டன் : கடனை வசூல் செய்வதை விட என்னை பிடிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது, என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு அதனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடினார் விஜய் மல்லையா. அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அவரை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டிவிக்கு அளித்த பேட்டியில் விஜய் மல்லையா கூறியிருப்பதாவது: இந்தியா வருவதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதித்து வருகிறேன். அதற்கான வாய்ப்புகள் இருந்தால் மேல் முறையீடு செய்வேன்.

நான் 2016ல் பணத்தை வழங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே என்னிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-டிச-201815:07:24 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் என்னவெல்லாம் கதை விடுகிறான் இந்த மோசடி பேர்வழி. வங்கிகள் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டனவாம். யார் காதில் பூ சுற்ற பார்க்கிறாய்.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan - chennai,இந்தியா
17-டிச-201811:12:39 IST Report Abuse
Nagarajan இந்த கேஸ் சம்பந்தப்பட்ட எல்லா பேங்க் மேனேஜர் சேர்த்து சிறையில் போடவேண்டும் அப்பதான் அடித்தவர்க்கு பயம் வரும் ஒழுங்கா லோன் திருபீ கட்டுவாங்க .
Rate this:
Share this comment
Cancel
neo - Nagercoil,இந்தியா
17-டிச-201811:08:41 IST Report Abuse
neo நாங்க ஊழல் செய்வோம், ஆனால் வேறு யாரையாவது பிடிச்சு உள்ள தள்ளி, நாங்க ஊழலுக்கு எதிரானவர்கள் என்று காட்டி கொள்ள வேண்டாமா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X